உனக்கு நீயே விளக்காயிரு ‍-புத்தர் *****வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது -டாக்டர் அம்பேத்கர்*****உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே -புத்தர்*****நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை -டாக்டர் அம்பேத்கர்*****அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது -புத்தர்***** நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை -டாக்டர் அம்பேத்கர்

25 ஆகஸ்ட் 2011

`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்
டாக்டர் அம்பேத்கர் எழுதிய "BUDDHA AND HIS DHAMMA" ஆங்கில நூலின்
தமிழாக்கம் "
தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு" ஒன்று அமைக்கப்பட்டு மிகு சிரமத்துடன் முதன் முதலில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்தது.
அந்நூலுக்கு உழைத்தவர்களின் பெயர்கள் தற்போது வெளிவரும் நூட்களில் மறைக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்களையும், அணிந்துரைகளையும் கீழே காணலாம்.


`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்டாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய " BUDDHA AND HIS DHAMMA" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என பேசக்கேட்டு கவலையுற்றேன்.
அது புனைக்கதையல்ல . முற்றிலும் ஆதாரப்பூர்வமானது என்பதை கீழ்கண்ட ஆதாரக் குறிப்புக்களை படித்து அவர்கள் தெளிவு பெறலாம்.


23 ஆகஸ்ட் 2011

பவுத்தம் வளர்த்த மேனாட்டினர்


ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்


(Albert Einstein, மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல்அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன், குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.
ஹெச். ஜி. வெல்ஸ்

(


(H. G. Wells, செப்டம்பர் 21, 1866 – ஆகஸ் 13, 1946) ஒரு ஆங்கில எழுத்தாளர். சம காலத்திய புதினங்கள், வரலாறு, அரசியல், சமூக விமர்சனம் என்று பலவகைப்பட்ட துறைகளில் எழுதினாலும் இவர் தனது அறிபுனை படைப்புகளாலேயே அறியப்படுகிறார். வெல்ஸ் அறிபுனை இலக்கியத்தின் தந்தையர் என்று கருதப்படும் இருவருள் ஒருவர். (மற்றவர் ழூல் வேர்ண்).

வெல்ஸ் ஒரு சமதர்மவாதி. பொதுவாக அவர் அமைதிவாதத்தை ஆதரித்தாலும் முதலாம் உலகப் போர் துவங்கிய போது அதனை ஆதரித்தார். ஆனால் பின்னர் இந்த ஆதரவு எதிர்ப்பாக மாறி விட்டது. இவரது பிறகாலத்திய எழுத்துகளில் அரசியல் கருத்துகள் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளன. இவரது எழுத்தின் மத்திய காலகட்டத்தில் (1900-1920) எழுதப்பட்ட படைப்புகளில் அறிபுனை படைப்புகள் குறைவு. கீழ் நடுத்தர வர்க்கம், பெண் வாக்குரிமைப் போராளிகள் போன்ற சமூகத் தொடர்புடைய விஷயங்களைப் பற்றி இக்காலகட்டத்தில் புதினங்களை எழுதினார். காலப் பயணம், மரபியல் சோதனைகள், வேற்று கிரக வாசிகள் பூமியைத் தாக்குதல், நிலவுக்கு மனிதன் செல்வது, அணு ஆயுதப் போர் போன்ற பிரபல அறிபுனை பாணிகளை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி வெல்சே. இவரது எழுத்துக்களால் கவரப்பட்ட ராபர்ட் கொடார்ட் என்னும் அறிவியலாளர் எறிகணைகளை (ராக்கெட்) கண்டுபிடித்தார். வெல்சின் படைப்புகள் பின் வந்த எழுத்தாளர் தலைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவற்றுள் பல திரைப்படங்களாகவும், வானொலி நிகழ்ச்சிகளாகவும் தயாரிக்கப் பட்டுள்ளன.கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்(Henry Steel Olcott, ஆகஸ்ட் 2,1832- பெப்ரவரி 17,1907) பல முகங்கள் கொண்ட இவர் ஒரு அமெரிக்க இராணுவ அதிகாரி, பத்திரிக்கையாளர், வழக்கறிஞர் மட்டுமல்லாது இவர் பிரம்மஞான சபையின் (தியோசாபிகல் குழுமம்) நிறுவனர்களின் ஒருவராவார். மேலும் இவரே இந்த குழுமத்தின் முதல் தலைவரும் ஆவார் .

ஐரோப்பிய வேர்களை கொண்ட பிரபலங்களில் முதன் முதலாக முறையாக பௌத்தத்திற்கு மாறிய பெருமை இவரையே
சாரும். மேலும் பிரும்மஞான சங்கத்தின் தலைவராக இவர் மிக சிறப்பாக பணியாற்றி பௌத்த மத கூறுகளை புரிந்துகொள்வதில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்தினார். மேற்குலக பார்வையில் பௌத்தத்தை முன்னிறுத்திய இவர் ஒரு நவீன பௌத்த அறிஞராக கருதபடுகிறார்.

இலங்கையில் பௌத்தத்தை மறு சீரமைப்பதில் இவருடய பங்கு முக்கியமானது. இன்றைய இலங்கையின் மத, கலாசார, தேசிய பண்புகளை மறுநிர்மாணம் செய்தவர் என்றும் இலங்கையின் விடுதலைப் போராட்டத்தின் நாயகர்களில் ஒருவர் என்றும் இன்றும் இலங்கையில் இவரின் பால் பெரும் மரியாதையோடு இருக்கின்றனர். மேலும் சில தீவிர விசுவாசிகள் இவரை போதிசத்துவர்களில் ஒருவர் என்றும் நம்புகிறார்கள்.
பெர்ட்ரண்டு ஆர்தர் வில்லியம் ரசல்


(Bertrand Arthur William Russell, 3rd Earl Russell, மே 18 - 1872 - பெப்ரவரி 2, 1970), ஒரு பிரித்தானிய மெய்யியலாளர், கணித மேதை, ஏரணவியலர் (தருக்கவாதி), சமூக சீர்திருத்தவாதி, அமைதிவாதி ஆவார். இவர் பெரும்பாலும் இங்கிலாந்தில் தன் வாழ்க்கையை கழித்தாலும், வேல்சில் பிறந்தார், அங்கேயே இறந்தார்.ரசல் 1900 ஆரம்பங்களில் பிரித்தானிய இலட்சியவாதத்திற்கு எதிராக கிளர்ச்சி என்பதைத் தொடங்கினார், மேலும் பகுப்பாய்வு தத்துவம் என்பதை அவர் மாணவர் விட்கன்ஸ்டைன், பெரியவர் ஃபிரேக என்பவர்களுடன் சேர்ந்து நிறுவினார். ஏ. என். ஒயிட்ஹெட் உடன் சேர்ந்து, பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (கணிதத்தின் கோட்பாடுகள்) என்னும் நூலை எழுதி, கணிதத்தை ஏரணத்தின் அடிப்படையில் நிறுவ முயன்றார். அவரது தத்துவக் கட்டுரை "ஆன் டிநோட்டிங்" (On Denoting) குறிப்பிடுவது பற்றி "தத்துவத்தின் வழிகாட்டி எடுத்துக்காட்டு" என கருதப்படுகிறது. இரு புத்தகங்களும் ஏரணம், கணிதம், மொழியியல், கணங்கள் கோட்பாடு, பகுப்பாய்வுத் தத்துவம்முதலியவற்றின் மேல் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தின.அவர் போர் எதிர்ப்புச் செயலாளர், காலனியத்தின் எதிர்ப்பாளர், தடையிலா வாணிபத்தின் ஆதரவாளர். ரசல் முதலாம் உலகப் போரின் போது தனது போர் எதிர்ப்பு செயல்களால் சிறை தள்ளப் பட்டார். இட்லருக்கு எதிராக பிரச்சாரம் நடத்தினார், சோவியத் ஒன்றியத்தின் வரம்பற்ற அதிகாரத்தை எதிர்த்தவர். அணுகுண்டு கைவிடுதலை ஆதரித்தவர், அமெரிக்காவின் வியட்நாம் உள்ளீட்டை எதிர்த்தவர்.

ரசலுக்கு, 1950 இல், இலக்கிய நோபல் பரிசு "அவருடைய பலதரப்பட்ட, முக்கியமான எழுத்துகளில் மானுட இலட்சியங்களையும், கருத்து சுதந்திரத்தையும் உணர்ந்தோம்" என்பதற்காக கிடைத்தது".சர். எட்வின் அர்னால்டு

sir edwin arnold (10 June 1832 – 24 March 1904)
செய்தியாளர்
, ஆசிரியர், மற்றும் கவிஞர்
.
சர். எட்வின் அர்னால்டு எழுதிய "The Light of Asia" என்னும் நூலைத் தழுவி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களால் எழுதப் பெற்ற நூல் "ஆசிய ஜோதி" ஆகும். இந்நூல் புத்தர் பெருமானின் வரலாற்றை விளக்குவது.வளரும்
.......


31 ஜூலை 2011

அன்னை மீனாம்பாள் சிவராஜ்
வேலூர் கோ.வாசுதேவப்பிள்ளை -மதுரை மீனாட்சி ஆகியோருக்கு புதல்வியாக 26 டிசம்பர் 1904 ல் பிறந்தார். தந்தை சிவராஜின் வாழ்க்கை இணையர். சைமன் குழு வருகையை ஆதரித்து பேசி 1928 ல் தம் பொது வாழ்வை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர். இந்தி எதிர்ப்பு போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர்.

சென்னை மாநகராட்சியின் துணை மேயர் ,கவுன்சிலராக 6 ஆண்டுகள், கவுரவ மாகாண நீதிபதியாக 16 ஆண்டுகள், திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக 6 ஆண்டுகள், சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினராக 9 ஆண்டுகள், தொழிலாளர் ட்ரிப்யூல் உறுப்பினர் , சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர், சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினராக 13 ஆண்டுகள் , போருக்குப்பின் புணரமைப்புக்குழு உறுப்பினர், S.P.C.A உறுப்பினர், நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர், தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர், அண்ணாமலை பல்கலை கழக செனட் உறுப்பினராக 6 ஆண்டுகள் , சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர், விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர், காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர், மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவராக 6 ஆண்டுகள், சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர், அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர், லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர் போன்ற பொறுப்புகள் வகித்து மக்கள் பணி ஆற்றியவர்.


பல்வேறு மகளிர் போராட்டங்களில் தலைமை ஏற்று வழி நடத்தியவர்.

பெரியார்
. வெ. ராமசாமிக்கு "பெரியார்" என்ற பெயர் வழங்கி சிறப்பித்தவர்.

இணையர்
தந்தை சிவராஜுடன் இணைந்து பவுத்த நெறியினை மக்களிடம் பரப்பினார்.

டாக்டர்
அம்பேத்கரின் தங்கை என செல்லமாக அழைக்கப்பட்டவர்.

30
நவம்பர் 1992 ல் பரிநிப்பாணம் அடைந்தார்.

தந்தை என். சிவராஜ் B.A., B.L.,Ex.MP.,Ex.Mayor
வறுமை என்னவென்று தெரியாத நமச்சிவாயம் -வாசுதேவி தம்பதியருக்கு சென்னை ராஜஸ்தானியில் ஒன்றிணைந்த கடப்பா ஜில்லாவில் 1892 செப்டம்பர் 29 ஆம் தேதி பிறந்தார்.

4 ஆம் வகுப்பு வரை தன் வீட்டிலேயே படித்தார். பின் சென்னை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் அப்போது தலைமை ஆசிரியராக இருந்த டி.ஜான்ரத்தினம் அவர்களிடம் 5 ஆம் வகுப்பு பயின்றார். தனது மெட்ரிக் படிப்பை முடித்து வெஸ்லி கல்லூரியில் 'இண்டர்மீடியேட்' பயின்றார்.

பிறகு சென்னை மாநிலக்கல்லூரியில் B.A பட்டம் பயின்றார். இக்கல்லூரியில் டாக்டர் இராதாக்கிருஷ்ணன் இவரின் ஆசிரியராக இருந்தது சிறப்புக்குரியது.

பின் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பினை முடித்தார். மேலும் சட்டக் கல்லூரியில் 3 ஆண்டுகள் பேராசியராக பணியாற்றினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வழக்காட தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். தனக்கு துணை நீதிபதி பதவி தந்ததை ஏற்காமல் மக்கள் பணி செய்வதை உயர்வாக கருதினார்.

1918 ஜூலை 10 ல் தனது 26 ஆம் வயதில் அன்னை மீனாம்பாளை வாழ்க்கை இணையராக்கிக்கொண்டார்.

தம்பதிகள் ஆதிதிராவிட மகாஜன சபா, ஜஸ்டிஸ் கட்சி , சுயமரியாதை இயக்கம், ஆகியவற்றுடன் இணைந்து சாதி ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு மறியல் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டனர்.

கல்யாணி, தயாசங்கர், பத்மினி, போதி சந்தர் என 4 மகவுகள் இவர்களுக்கு பிறந்தனர்.

பவுத்தத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக இருவரும் பின்பற்றினர்.

சென்னை மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் செனட் உறுப்பினராக தந்தை திகழ்ந்தார்.

அப்பொழுது மிகப்பெரிய அந்தஸ்தில் உள்ள பெரு முதலாளிகளுக்கு சரி நிகராக பந்தயக்குதிரைகளை வைத்து போட்டிகளில் வென்று காட்டியவர்.

ஆதிதிராவிட மக்கள் சட்டை அணியக்கூடாது, காலில் செருப்பு போடக்கூடாது என்பவை மனித உரிமைக்கு துரோகமானது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுத்திட தனி அதிகாரியினை நியமிக்க வேண்டுமென சட்ட சபையில் முழங்கியவர்.


சென்னை மாகாண தாழ்த்தப்பட்ட சம்மேளனத்தின் பொதுச்செயலாளராகவும், சென்னை மாகாண தாழ்த்தப்பட்டோர் துணைத் தலைவராகவும் இருந்தவர்.

இரட்டை மலை சீனுவாசனாருடன் டாக்டர் அம்பேத்கர் அமைத்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளனத்திற்கு (A.I.S.C.F) 1942 முதல் தலைவராக இருந்தவர்.

பிறகு டாக்டர் அம்பேத்கர் A.I.S.C.F கலைத்து விட்டு அகில இந்திய குடியரசுக் கட்சியை அமைத்தார்.

1956 முதல் அக்கட்சியின் தலைவராக தந்தை சிவராஜ் ஏக மனதாக நாக்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிக்காலம் வரை அப்பொறுப்பினை வகித்தார்.

இந்து மதத்தினை புறக்கணித்து விட்டு , மதம் மாறினால்தான் , நாம் ஒரு தனி இனமாக உரிமைக்குரல் எழுப்பிட முடியும்,போராட முடியும் என வலியுறுத்தினார்.

நம் பூர்வீக பவுத்த நெறியினை மக்களிடையே பரப்பினார்.

1945-46 ல் சென்னை மாநகர மேயராக பதவி வகித்தார். அப்போது கல்விக்காக 16 பள்ளிகளை ஏற்ப்படுத்தி, இலவச உணவும் அளிக்கச்செய்தார்.

1964 செப்டம்பர் 29 ஆம் நாள் அதிகாலை 5.30 மணிக்கு மாரடைப்பால் பரிநிப்பானம் அடைந்தார்.

09 மே 2011

இந்தியாவின் முதன்மை பவுத்த அடையாளங்கள்1906 ஆம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இக்கொடியினை இந்திய தேசியக் கொடியாக வடிவமைத்தனர். இதில் அன்னிபெசன்ட் அம்மையாரும்,
திலகரும் முதன்மையானவர்கள்.


1916-17 ல்,திலகரும், அன்னிபெசன்ட் அம்மையாரும் சேர்ந்து "ஹோம் ரூல்" இயக்கத்தினை தோற்றுவிக்கின்றனர். அவ்வியக்கத்தின் போது இக்கொடியினை இந்திய தேசிய கொடியாக உருவாக்கினர்.


1921 ல் மோகன் லால் கரம்சந்த் (காந்தி!!!) முயற்சியால் இக்கொடி உருவாக்கப்பட்டது. சிறுபான்மையினருக்கு வெள்ளை, இசுலாமியருக்கு பச்சை, இந்துக்களுக்கு சிவப்பு, கைராட்டினம் மக்களின் வாழ்வாதாரம் எனவும் கற்பிதம் செய்யப்பட்டது.1931 ல் இக்கொடி, முழுவதும் இந்துத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டது.
1931 ஆகஸ்ட் 1 ல் காங்கிரஸ் அங்கீகாரத்தின் பேரில் கொடியமைப்பு இவ்வாறு மாற்றப்பட்டது. இதில் ஆரஞ்சு (தைரியம்), வெண்மை (சமாதானம்), பசுமை (தன்னம்பிக்கை), கைராட்டினம் (மக்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை தருவது) என கற்பிதம் செய்யப்பட்டது.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ராஜேந்திர பிரசாத்அவர்களை தலைவராகவும், மௌலானா அபுல் கலாம் ஆசாத், கே. எம். பனிக்கர்,சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலச்சாரி, கே. எம். முன்ஷி, பி. ஆர். அம்பேத்கர் ஆகியோரை குழுநபர்களாக கொண்ட அமைப்பு, தேசியக் கொடியாக ஒரு கொடியை நியமிக்க விவாதிக்கிறது. . கொடியில் பட்டை, நாமம், ராட்டை போன்றவைகளை வைப்பதற்கு மதத்தலைவர்களால் பல்வித கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.
அது டாக்டர் பி. ஆர். அம்பேத்கருக்கு உடன்பாடாக இல்லை.அவையினைவிட்டு வெளிநடப்பு செய்கிறார்.


டாக்டர் பி. ஆர். அம்பேத்கரால் அரசமைப்புச் சட்டம் எழுதவேண்டியிருப்பதால் சின்னம் பொறிப்பது குறித்து அவரின் முடிவுக்கே விடப்பட்டது.
இந்தியாவின் பூர்வீக பவுத்த சமயத்தின் அடையாளமாக அசோகச்சக்கரத்தை பரிந்துரைக்கிறார். அது 1947 ஜூலை 22 ஆம் தேதி பொறிக்கப்படுகிறது.இது போல புத்தர் முதல் பேருரை நிகழ்த்திய சாரநாத்தில் உள்ள புத்த சமயத்தை சார்ந்த அசோகரின் ஸ்தூபியில் வடிவமைக்கப்பட்டிருந்த நான்முக சிங்க முகங்கள் இந்திய அரசின் சின்னமாகவும், இந்திய நாணயம் மற்றும் பணங்களிலும் பொறிக்கப்படுகிறது.


மேலும், அந்த ஸ்தூபியின் சிங்ககங்களுக்கு அடியில் புத்தர் கூறிய "விரிதாமரை இதழ் போல உன் மனதை திறந்து வை" என்பதற்கேற்ப 16 இதழ்களுடன் வடிவமைக்கப்பட்ட "தாமரை " இந்தியாவின் தேசிய மலராக அறிவிக்கப்பட்டது.

இச் சின்னங்கள் இந்தியாவின் முக்கிய அடையாளமாக மாறியதால் மதவாதிகள் தேசியக்கொடியையும், பணங்களையும் அழிக்கமுடியாமல், புத்தர் கிருஷ்ணனின் 11 வது அவதாரம் என பிதற்றுகின்றனர்.

மேலும்,இந்து மதக் கட்சியின் (பிஜேபி) அரசியல் சின்னமாக சிதைந்துள்ளது.
இவை மட்டுமின்றி பல்வேறு தளங்களில் பூர்வீக பவுத்த சமய அடையாளங்கள் சிதைக்கப்பட்டுள்ளது.

இப்பூர்வீக சமயத்தினை பின்பற்றிய பூர்வ குடிகளும் இந்து, முஸ்லீம், கிருத்துவம் என சிதைந்துள்ளனர்.

வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது என்பார் டாக்டர்


பூர்வ குடிகள் தம் வரலாற்றை அறிய முன் வருவதும், பவுத்த அடையாளங்களை மீட்டெடுப்பதும் இன்று அவசியத் தேவை.

06 மே 2011

வரலாற்றின் தொடக்கம்...


தமிழ்ச் சமூகத்திற்கு பெண்ணியம் என்பது புதிய சிந்தனையல்ல.இலக்கியங்களில் அறம் வளர்த்தவளாக மணிமேகலை,சமூகத்திற்கு தீங்கிழைப்பவர்களை அழிப்பவளாக குண்டலகேசி என பல்வேறு தளங்களில் பெண்கள் கோலோச்சிய காலங்கள் காணக்கிடக்கின்றன. ஆனால் சிந்தனையாளர்கள், படைப்பாளிகள், அறிவு ஜீவிகளால் சமூக வளர்ச்சி, தேச நலம் போன்றவைகளில் ஒற்றுமையாக செயல்பட முடிந்தாலும் பெண் விடுதலை சார்ந்த கருத்துக்களில் நெடுங்காலமாகவே மாறுபட்டே இருந்து வந்துள்ளனர்.


வரலாற்றில் தாய் உரிமைச் சமுகம் ஆதிச்சமுதாய அமைப்பாக இருந்துள்ளது. வேட்டைச் சமுகத்திற்கு முந்தைய காலங்களில் உணவு தேடுவதே வேலையாக இருந்தது.ஆண்,பெண் பிரிவினை என்பது இல்லாதிருந்தது. குழந்தைப்பேறு, பாலூட்டுவது போன்ற செயல்களால் பெண் முன்னுரிமை பெற்றிருந்தாள். ஈட்டி, வேல் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டதும் வேட்டையானது ஆணின் தொழிலாக மாறிற்று. மேய்ச்சல் மற்றும் உணவு சேகரிப்பிற்காக விவசாயத்தை பெண்களே கண்டுபிடித்தனர்.உழு கலப்பைகள் கண்டுபிடித்தவுடன் விவசாயம் ஆண்கள் வசமாயிற்று. ஆண்களின் கைகளில் பொருளாதார பலம் குவிக்கப்பட்டது. அப்பலம் பெண்களின் மீது எளிதாக ஆண்களால் பிரயோகிக்கப்பட்டது. அப்பொழுது கால்நடைகளை கொடுத்து பெண்களை விலைக்கு வாங்கினர். தவிர்க்க முடியாதபடி ஆணாதிக்க சமூகம் நிறுவப்பட்டது. தனிச்சொத்தின் தோற்றத்திற்கும் பெண் அடிமைத் தனத்திற்கும் நேரடி தொடர்பு இருந்திருக்கவேண்டும் என்று எங்கல்ஸ் கூறுவது கவனிக்கத்தக்கது.

பின்னர் அந்த அடிமைத்தனத்தை மத நிறுவனங்கள் கையில் எடுத்துக்கொண்டு பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. பெண்ணானவள் ஆணின் உடைமை. உடைமையினை மறு உற்பத்தி செய்பவள் என்று செயற்கை பொறுப்புக்களில் திணிக்கப்பட்டதால் அவளுடைய பாலியல் அவளுக்குரியதாக இன்றி, ஆணுக்காகவும், அவனால் கையாளக் கூடியதாகவும் ஆக்கப்பட்டது.

இயற்கையானது பெண்ணையும், ஆணையும் சமமாகவே நிலைநிறுத்தியுள்ளது. இயற்கை இயங்கு விதியில் இது ஒரு நட்பு முரண். இந்த நட்பு முரண் இல்லையெனில் மனித குலம் அழியும். இம்முரணை வர்க்க பேத, சாதிபேத மற்றும் அனைத்து ஆதிக்கத்திற்கும் அடிப்படைத் தளமாக கட்டமைத்துவிட்டது ஆணாதிக்க உலகம்.

மதம், சமூகம், தத்துவம், அரசியல், பொருளியல் எல்லாமே ஆண்களின் தனிப்பட்ட உரிமையாகவே இருந்து வருவது வரலாற்றின் வெறுப்பூட்டும் தொடர் உண்மையாகும். இதனால் பெண்கள் சமூக கடமையற்றுவதற்கு வாழ்வியல் சுழல்கள் பெருந்தடையாக உள்ளது.

பருவ வயதடையும் வரை ஆண், பெண் இருவருக்கும் எவ்வித மாறுபாடுகளும் இருப்பதில்லை. வழிவழியாக சமூகம் தன் மூளையில் பதிவாகிய படிமங்களைக் கொண்டு, ஆண் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு பொருட்கள், உடைகள் போன்றவற்றை தனித்தனியே பிரித்து வழங்கிக்கொண்டிருக்கிறது. இது பள்ளி, கல்லூரிகளிலும் அழுத்தமாக கற்பிக்கப்படுகிறது.

இப்பொழுதெல்லாம் பெண்கள் எவ்வளவோ முன்னேறி விட்டார்கள் என கூறுவது ஆணாதிக்க சிந்தனையின் மறுவடிவமாகவே காண முடிகிறது. இவர்கள் விதிவிலக்குகளை கணக்கிலெடுத்து விதிகளை காண மறுப்பவர்கள்.

இருபதாம் நூற்றாண்டில்தான் பெண்களுக்கான பல சட்டங்கள், சங்கங்கள், புத்தகங்கள் பல வந்துள்ளன. இருப்பினும் இன்னும் வெறும் உடம்பாக மட்டுமே பார்க்கும் பார்வை மட்டும் மறைய மறுக்கிறது. பெண்ணை அடிமையாக பார்க்கும் பார்வையானது நாம் பழங்கால மூட நம்பிக்கையினை இன்னும் விடாமல் வளர்த்துக் கொண்டிருப்பதாகவே கருத முடியும்.

மேலும் பல பெண்கள் தங்களுக்கான உரிமைகள் மற்றும் சலுகைகளை பிரித்தறியத் தெரியாமல் இருக்கின்றனர். சலுகைகளை விட்டொழித்தால்தான் உரிமைகளை பெற முடியும் என்பதை உணர்தல் வேண்டும்.

தற்பொழுது திருமணங்கள் பெரும்பாலும் ஆணுக்கு மகிழ்ச்சியானதாகவும், கூடுதல் இணைப்பாக வேலைக்காரி, சமையல்காரி, தாய், தாசிகளுடன் கிடைப்பதாகவே எண்ணுகிறான். தன் அழைப்பிதழில் கூட வாழ்க்கை இணையர் என்பதற்கு பதிலாக வாழ்க்கை துணை என அச்சிட்டு தன்னுடைய ஆணாதிக்கத்தை நிலைநிறுத்துகிறான்.

ஆணுக்கு உள்ளது போல் பெரும்பான்மை பெண்களுக்கு திருமணம் மகிழ்ச்சியளிக்காமல் புதிய கடமைகள், புதிய சுழல்கள் போன்றவை குறித்து அச்சமூட்டுபவையாகவே இன்றும் உள்ளது.

ஊடகங்கள் அனைத்தும் ஆணாதிக்க சூழலுக்கு ஆதரவு அளிப்பதாகவே உள்ளது. கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமே இருக்க வேண்டுமென்கிறது.

இச்சிந்தனை மாற்றத்தினை எழுதுவதலோ, பேசுவதாலோ மாற்றி விடுதல் என்பது இயலாது. ஆண், பெண் சமத்துவத்தின் அடிப்படை அறிவியல் பூர்வமான வேலைப்பிரிவினையோடு கூடியதாக நம் மாற்றி அமைக்கப்பட்டு தொடங்கப்படுதல் வேண்டும்.

மனித இனத்தை செழுமையாகவும், முழுமையானதாகவும் வார்த்தெடுக்கும் நிகழ்வுகள்தான் மனித குல வரலாறு. உண்மையான மனிதகுல வரலாற்றின் தொடக்கம் பெண் விடுதலையிலிருந்துதான் பெற முடியும்.

03 மே 2011

அறிதல்


இயற்கையின் படைப்பில் மானுடம் மிக அழகானது. மற்றெந்த உயிர்களுக்குமில்லா பேசும் தன்மை, சிந்திக்கும் தன்மை, பகுத்தறியும் தன்மை, ரசிப்புத்தன்மை போன்றவை பொருந்தி அமைந்த உயிரினமாக மானுடம் திகழ்கிறது. ரசிப்புத்தன்மை என்பது மானுடத்திற்கு மட்டுமே உரியது. இயற்கையை முழுமையாக உணர்ந்து வாழ ரசிப்புத்தன்மை மிக அவசியமாகிறது. இயற்கையை அழகாக உணர மானுடம் மட்டுமே அறிந்து வைத்திருக்கிறது.

ரசிப்புத்தன்மைக்கு அடிப்படை காதல். காதலினை இப்படியும் சொல்லலாம். இனவிருத்திக்காக இயற்கை செய்யும் தூண்டுதல் உணர்வின் தொடக்கம் தான் காதல். எனவே காதலின் அடிப்படையாக காமம் இருக்கிறது. எதிரெதிர் வினையினை கவர்வதற்காகவே இயற்கையை நாம் அழகாக பார்க்கக் கற்றுக்கொள்கிறோம்.

உண்மையான அழகை தேடலில் காணலாம். அழகிற்கான தேடல் உள்ளவரை மனிதன் ரசிகனாக இருக்கிறான்.தேடுவதற்கும் அறிவதற்கும் வேறுபாடு உண்டு. தேடுவதற்கு தீர்மானம் இருந்தால் போதும்.ஆனால், பக்குவம் இருந்தால்தான் அறிய முடியும்.
பிரபஞ்சத்தில் படைப்பாளிகளை இருவகைப்படுத்தலாம். ஒன்று இயற்கை. மற்றொன்று படைப்புக்குள்ளேயே படைப்பாளி ஆகிக்கொள்கிற மானுடம்.அம்மானுடம் இயற்கைப் படைப்புக்களை அழகோடு பார்க்கும் பார்வைகளை அழகியல் எனலாம்.

இயற்கையை அழகோடு பார்க்கும் தொடர் பழக்கத்தினால் இயற்கையிலுள்ள பொருட்கள் ரசனைக்குரியதாக மாறுகிறது.

எது விதைக்கப்படுகிறதோ அது சுழலின் தன்மையோடு வளர்த்தெடுக்கப்படும். தற்போது சூழலைப் பொறுத்து ரசனையின் அளவுகோலும் மாறியுள்ளது. ரசனையின் அளவுகோல் மாறியதற்கு மனிதன் இதுவரை தன் மூளையில் உள்வாங்கிக்கொன்டுள்ள பலவிதமான முன்முடிவுகளே அதற்குக் காரணம்.
இதன்
காரணிகளாகஊடகம்,கடவுள்,மதம்,சாதி,மோட்சம்,நரகம்,ஊழ்வினை,ஆன்மா,வர்க்கபேதம்,ஆண்,பெண்,
பேதம் போன்றவைகளை கூறிக்கொண்டே போகலாம்.


இயற்கை தன்னை அழகாகவே காட்டிக்கொண்டிருக்கிறது.நாம்தான் பார்க்கத் தவறிக்கொண்டிருக்கிறோம்.அழகை ரசிக்க மறந்து விட்டு வாழ்க்கையில் எப்பாடியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என எண்ணுகிறோம்.
உண்மையில் வெற்றி என்பது பொய்த்தோற்றம். வெற்றியினை தேடுவதென்பது சமுதாய நிர்பந்தத்தினால் மட்டுமே. அதன் அடிப்படையாக இருப்பது சமூக நிராகரிப்பு குறித்த அச்சமே. எல்லா ஆசைகளும் அச்சத்தின் அடிப்படையிலேயே அமைகிறது.

தேவை வேறு. ஆசை வேறு.ஆதியில் மானுடம் தேவைக்காக மட்டுமே அழகியலை உள்வாங்கியிருந்தது. ஆனால் தற்பொழுது ஆசைக்காக இயற்கையான அழகியலை மறந்துவிட்டு செயற்கைத் தன்மைக்கு மானுடம் மாறியிருக்கிறது.

புதிதாகக் கற்றுக்கொண்டு வாழத்தேவையில்லை.வாழத்தடைகளாகக் கற்றுக்கொண்டவைகளை மனதிலிருந்து அழித்து விட்டால் போதும்.
தேவைக்கேற்ப மட்டும் ஆசை அமைந்தால் தெளிவும், நிதானமும் தானாகப்பிறக்கும். தெளிவு பிறந்து விட்டால் பார்வை தெரியும். பார்வை தெரிந்தால் பாதை தெரியும்.

பார்வையானது ஒருவருக்கொருவர் கொண்டுள்ள முன் முடிவுகளின் அடிப்படையில் தேவை சார்ந்து மாறுபடுகிறது. முன்முடிவுகளால் இயற்கையிலுள்ள மானுடம் இயற்கையுடன் அந்நியப் பட்டு நிற்கிறது.
வாழ்க்கை என்பது ஒவ்வொரு கணத்தையும் முழுதாய் ஆக்கிக்கொள்வதுதான்.
புவியிலுள்ள பொருட்களை மானுடம் ரசிக்கக் கற்றுக்கொண்டதால்தான் நமக்கு பல்வேறு கலைகள் கிடைத்தது. ஆக்கப்பூர்வமான விடயங்கள் அனைத்தும் அழகியல் தன்மையோடுதான் நிகழ்ந்தேறியுள்ளது .அழகியலற்ற தன்மை மானிடத்தை அற்ப நிலைக்கு தள்ளிவிடும்.


முன்முடிவுகளால் ஏற்படுத்திக்கொண்ட எதிர் மறைகளை விலக்கி, நேர்மறைகளை நோக்கி பார்வையினை செலுத்தினால் இப்புவி அழகாகும்.


அழகியலை மானுடத்திற்கு விளக்க வேண்டிய கலை வல்லுனர்களே முன்முடிவுகளால் குறுகி விற்ப்பன்னர்களாக மாறியுள்ளது வருந்தத் தக்கது.கலைகளை தவிர்த்து விட்டு வரலாறு என்பது கிடையாது. உண்மையான வரலாறு என்பதை கலை,இலக்கியங்களிலிருந்து மட்டுமே அறிய முடியும்.கலை,இலக்கியம் உருவாக அழகியல் தன்மை முதன்மையாக உள்ளது.


ஆக
,அழகியல் பார்வையை விரிவுபடுத்துவோம்.

அழகியலோடு வாழ்வோம்.

அழகியலோடு உண்மை வரலாற்றை மானுடத்திற்கு அளிப்போம்.

புத்த மார்க்க வினா-விடை - க.அயோத்திதாசர் -- பதிவிறக்கம் செய்ய

02 மே 2011

இளங்கோவன் எதிர் தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் வழக்கின் நாளிதழ் செய்திகள் (பழையது)

1990 ஆம் ஆண்டு திருத்தச்சட்ட நகல்

உயர்நீதி மன்ற தீர்ப்பின் கீழ் வழங்கப்பட்ட பவுத்த சான்று

பவுத்தம் மாறியதற்கான சான்றிதழ்

அரசிதழில் பவுத்தம் மாறியதற்கான அறிவிப்பு

உயர்நீதி மன்ற தீர்ப்பாணை W.P.NO.5874 OF 2010இத் தீர்ப்பு நகலை வைத்து இந்தியா முழுவதிலும் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பவுத்த சான்று தயக்கமின்றி பெற முடியும்.

புதிய நீதிச்சக்கரம் மே,2010,பக்கம்,17தலித்முரசு செப்டெம்பர்,2010,பக்கம்,21
தினத்தந்தி 17,ஏப்ரல்,2010,பக்கம்,2

தினமலர் 17,ஏப்ரல்,2010,பக்கம்,11தினமணி 17,ஏப்ரல்,2010, பக்கம்,6இந்தியன் எக்ஸ்பிரஸ்,17,ஏப்ரல்,2010,பக்கம்,2டெக்கான் க்ரானிகிள் 17,ஏப்ரல்,2010,பக்கம்,5டைம்ஸ் ஆப் இந்தியா 17,ஏப்ரல்,2010,பக்கம்,6தி ஹிண்டு, 17, ஏப்ரல்,2010, பக்கம்,707 பிப்ரவரி 2011

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் – சினிமா வடிவில் ஒரு நிஜ ஹீரோவின் வரலாறு


வரலாற்று நாயகன், பேரறிஞர், துணிச்சலான தலைவன்…. இந்த வார்த்தைகளுக்கு வெளியில் அர்த்தம் தேட வேண்டியதில்லை. இந்த தேசத்திலேயே ஒருவர் வாழ்ந்து, வழிகாட்டி, இன்றும் ஒளிவிளக்காகத் திகழ்கிறார்… அவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.

தலித் இன மக்களுக்கு மட்டுமல்ல.. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க உதித்த சூரியன்.

பெரும்பாலும் தலைவர்கள் மக்களை உணர்ச்சி வசப்பட வைப்பார்கள். கூச்சலிட வைப்பார்கள்… ஆட்டுமந்தைக் கூட்டமாகவே எப்போதும் அவர்கள் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் சுயசிந்தனை பெற வேண்டும் என்று மட்டும் விரும்பவே மாட்டார்கள்.

ஆனால் அம்பேத்கர் என்ற சூரியன் மட்டும் பகுத்தறிவு ஒளியை தன் இனத்தின் அடிமை மக்களுக்கு தாராளமாய்த் தந்தது. கல்வியும், அரசியல் – அதிகார கைக்கொள்ளலுமே, தலித் இன மக்களின் சமூக அடிமத்தளையைக் கட்டறுக்கும் என்பதை ஓயாது ஒலித்துக் கொண்டே இருந்த மாபெரும் சிந்தனாவாதி டாக்டர் அம்பேத்கர்.

மிகச் சிறந்த பொருளியல் அறிஞர், அரசியல் தத்துவ மேதை, சமூக சீர்த்திருத்தவாதி, பகுத்தறிவு சிந்தனையாளன், கேட்கும் எவரையும் அடித்து வீழ்த்தும் அபாரமான பேச்சாளர், வரலாற்று ஆசான், மிகச்சிறந்த எழுத்தாளர், ஆங்கிலேயர்களும் வியக்கும் ஆங்கில அறிவுக்குச் சொந்தக்காரர்… இத்தனை அறிவையும் பெருமைகளையும் தன் இன மக்களும் பெற வேண்டும் என்பதற்காக தன் குடும்பம், உடல் நலன் அனைத்தையும் மறந்து கடைசி மூச்சு வரை உழைத்தார்.

தன் இறுதிமூச்சு வரை சமூக அடிமைத்தன விலங்கை உடைக்க அவர் களமாடிய போராட்டங்களும், சந்தித்த அவமானங்களும் கொஞ்சமல்ல. நான் ஒரு இந்துவாகப் பிறந்தேன்… ஆனால் இந்த கீழ்மைத் தனம் நிரம்பிய ஒரு மத அடையாளத்தோடு நிச்சயம் இறக்க மாட்டேன் என்று சபதமிட்டு, புத்த மதத்துக்கு மாறி இந்து சனாதனத்துக்கு சாட்டையடி கொடுத்தவர் அம்பேத்கர்.

லண்டன் வட்ட மேஜை மாநாட்டின்போது, ஹரிஜனர்களின் காவலன் நான் என்று காந்தி போன்றவர்கள் போலி கோஷமிட்டபோது, அவர்களின் முகத் திரையை அங்கேயே கிழித்துப் போட்டவர் அம்பேத்கர் ஒருவர்தான். அந்த மனிதரின் துணிச்சல் அன்றைக்கு காந்தியை மட்டுமல்ல, அகிலத்தையே ஆட வைத்தது என்றால் மிகையல்ல!

இப்படியொரு அசாதாரண தலைவனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வருகிறது தமிழில்.

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் எனும் பெயரில் 2002-ல் வெளியான இந்தப் படம், அசாதாரண கால தாமதத்துக்குப் பிறகே தமிழுக்கு வருகிறது.

மம்முட்டி மிகச் சிறப்பாக நடித்த இந்தப் படம் சர்வதேச அளவில் பாராட்டுக்களையும் விருதுகளையும் குவித்தது.

காந்தியைப் பற்றி வெளிப்படையான விமர்சனங்களைக் கொண்ட ஒரே படம் என்றால் அது அநேகமாக பாபாசாகேப் அம்பேத்கராகத்தான் இருக்கும்.

அம்பேத்கரின் புகழ்பெற்ற குற்றச்சாட்டான, “காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. சீஸனுக்கு சீஸன் அவர் குணம் மாறும். ஆதரவும் மாறும். ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தலித்துகள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது”, என்பதை இந்தப் படத்தில் அப்படியே அனுமதித்துள்ளது பெரிய விஷயம்.

பூனா உண்ணாவிரதத்தில் தன்னை நெருக்குதலுக்குள்ளாக்கி உடன்பட வைத்தபோது காந்தியின் முகத்துக்கு நேரே அம்பேத்கர் இப்படிச் சொல்கிறார்: “காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம்!”

இந்த நிகழ்வும் வசனங்களும் கூட அம்பேத்கர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

அம்பேத்கராக இந்தப் படத்தில் வாழ்ந்துள்ளவர் மம்முட்டி. அம்பேத்கரின் முதல் மனைவியாக ‘சலாம் பாம்பே’ புகழ் சோனா குல்கர்னி நடித்துள்ளார். மம்முட்டிக்கு சிறந்த நடிப்புக்காக தேசிய விருது அளிக்கப்பட்டது இந்தப் படத்துக்காக.

ஒரு மகத்தான மக்கள் தலைவரைப் பற்றிய படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் என்று அமெரிக்கப் பத்திரிகைகள் புகழாரம் சூட்டின. பிரிட்டிஷ் திரைப்பட விழாவில் அனைத்து இயக்குநர்களும் ஒருமித்த குரலில் பாராட்டிய ஒரே படம் அம்பேத்கர்தான்.

தமிழில் வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 3) வெளியாகும் இந்தப் படத்தை மிகச் சிறப்பாக வரவேற்க தலித் இயக்கங்களும், முற்போக்கு சிந்தனை அமைப்புகளும் தயாராகி வருகின்றன.

தலித் மக்கள் என்றல்லாமல், பெண்களுக்கு முழுமையான சுதந்திரத்துக்காக சட்ட வரைவையே முன்வைத்தவர் அம்பேத்கர் மட்டுமே. எனவே அவரது இந்த வாழ்க்கை வரலாற்றை பெண்கள் திரளாகப் பார்க்க வேண்டும். இனவேறுபாடுகளுக்கு அப்பால், மக்கள் பார்க்க வேண்டிய படம் அம்பேத்கர்.


-பிரபா

INOX, SATHYAM, ESCAPE, ABIRAMI : சனி & ஞாயிறு காலைக் காட்சி

AGS 10 a.m,
RAKKI 11.30 a.m & 10 p.m
MAAYAJAL 11.30 a.m
ALBERT 11.15 a.m
UDAYAM 11.30 a.m

ஆகிய திரையரங்குகளில் இத்திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது. ஆடுகளாய் இருந்த நம்மை சிறுத்தைகளாய் மாற்றிய புரட்சியாளரின் வரலாற்றுப் படத்தை பாருங்கள்.
-
‘பாபாசாகேப் அம்பேத்கர் திரைபடத்தை’ ஒரு வெற்றி படமாக்கவேண்டியது அல்லது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நம் கடமை.

அதன் துவக்கமாக, இன்று வெளியாகிற ‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்’ திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக சென்று பார்க்கவும், அடுத்தவர்களுக்கு பரிந்துரைக்கவும் வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
www.ambedkar.in