புத்தர்

Buddha

அம்பேத்கர்

Ambedkar

நிம்மதிக்கான இரண்டு வழிகள்: விட்டுக்கொடுங்கள் அல்லது விட்டுவிடுங்கள்

I never see what has been done; I only see what remains to be done

நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமையில்லை

Cultivation of mind should be the ultimate aim of human existence

உனக்கு நீயே விளக்காயிரு ‍-புத்தர் *****வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது -டாக்டர் அம்பேத்கர்*****உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே -புத்தர்*****நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை -டாக்டர் அம்பேத்கர்*****அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது -புத்தர்***** நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை -டாக்டர் அம்பேத்கர்

09 மே 2011

இந்தியாவின் முதன்மை பவுத்த அடையாளங்கள்



1906 ஆம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இக்கொடியினை இந்திய தேசியக் கொடியாக வடிவமைத்தனர். இதில் அன்னிபெசன்ட் அம்மையாரும், திலகரும் முதன்மையானவர்கள்.


1916-17 ல்,திலகரும், அன்னிபெசன்ட் அம்மையாரும் சேர்ந்து "ஹோம் ரூல்" இயக்கத்தினை தோற்றுவிக்கின்றனர். அவ்வியக்கத்தின் போது இக்கொடியினை இந்திய தேசிய கொடியாக உருவாக்கினர்.


1921 ல் மோகன் லால் கரம்சந்த் (காந்தி!!!) முயற்சியால் இக்கொடி உருவாக்கப்பட்டது. சிறுபான்மையினருக்கு வெள்ளை, இசுலாமியருக்கு பச்சை, இந்துக்களுக்கு சிவப்பு, கைராட்டினம் மக்களின் வாழ்வாதாரம் எனவும் கற்பிதம் செய்யப்பட்டது.



1931 ல் இக்கொடி, முழுவதும் இந்துத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டது.




1931 ஆகஸ்ட் 1 ல் காங்கிரஸ் அங்கீகாரத்தின் பேரில் கொடியமைப்பு இவ்வாறு மாற்றப்பட்டது. இதில் ஆரஞ்சு (தைரியம்), வெண்மை (சமாதானம்), பசுமை (தன்னம்பிக்கை), கைராட்டினம் (மக்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை தருவது) என கற்பிதம் செய்யப்பட்டது.


இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ராஜேந்திர பிரசாத்அவர்களை தலைவராகவும், மௌலானா அபுல் கலாம் ஆசாத், கே. எம். பனிக்கர்,சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலச்சாரி, கே. எம். முன்ஷி, பி. ஆர். அம்பேத்கர் ஆகியோரை குழுநபர்களாக கொண்ட அமைப்பு, தேசியக் கொடியாக ஒரு கொடியை நியமிக்க விவாதிக்கிறது. . கொடியில் பட்டை, நாமம், ராட்டை போன்றவைகளை வைப்பதற்கு மதத்தலைவர்களால் பல்வித கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.அது டாக்டர் பி. ஆர். அம்பேத்கருக்கு உடன்பாடாக இல்லை.அவையினைவிட்டு வெளிநடப்பு செய்கிறார்.


டாக்டர் பி. ஆர். அம்பேத்கரால் அரசமைப்புச் சட்டம் எழுதவேண்டியிருப்பதால் சின்னம் பொறிப்பது குறித்து அவரின் முடிவுக்கே விடப்பட்டது. இந்தியாவின் பூர்வீக பவுத்த சமயத்தின் அடையாளமாக அசோகச்சக்கரத்தை பரிந்துரைக்கிறார். அது 1947 ஜூலை 22 ஆம் தேதி பொறிக்கப்படுகிறது.

இது போல புத்தர் முதல் பேருரை நிகழ்த்திய சாரநாத்தில் உள்ள புத்த சமயத்தை சார்ந்த அசோகரின் ஸ்தூபியில் வடிவமைக்கப்பட்டிருந்த நான்முக சிங்க முகங்கள் இந்திய அரசின் சின்னமாகவும், இந்திய நாணயம் மற்றும் பணங்களிலும் பொறிக்கப்படுகிறது.

மேலும், அந்த ஸ்தூபியின் சிங்ககங்களுக்கு அடியில் புத்தர் கூறிய "விரிதாமரை இதழ் போல உன் மனதை திறந்து வை" என்பதற்கேற்ப 16 இதழ்களுடன் வடிவமைக்கப்பட்ட "தாமரை " இந்தியாவின் தேசிய மலராக அறிவிக்கப்பட்டது. இச் சின்னங்கள் இந்தியாவின் முக்கிய அடையாளமாக மாறியதால் மதவாதிகள் தேசியக்கொடியையும், பணங்களையும் அழிக்கமுடியாமல், புத்தர் கிருஷ்ணனின் 11 வது அவதாரம் என பிதற்றுகின்றனர். மேலும்,இந்து மதக் கட்சியின் (பிஜேபி) அரசியல் சின்னமாக சிதைந்துள்ளது. இவை மட்டுமின்றி பல்வேறு தளங்களில் பூர்வீக பவுத்த சமய அடையாளங்கள் சிதைக்கப்பட்டுள்ளது. இப்பூர்வீக சமயத்தினை பின்பற்றிய பூர்வ குடிகளும் இந்து, முஸ்லீம், கிருத்துவம் என சிதைந்துள்ளனர். வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது என்பார் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் .பூர்வ குடிகள் தம் வரலாற்றை அறிய முன் வருவதும், பவுத்த அடையாளங்களை மீட்டெடுப்பதும் இன்று அவசியத் தேவை.

06 மே 2011

வரலாற்றின் தொடக்கம்...

தமிழ்ச் சமூகத்திற்கு பெண்ணியம் என்பது புதிய சிந்தனையல்ல.இலக்கியங்களில் அறம் வளர்த்தவளாக மணிமேகலை, சமூகத்திற்கு தீங்கிழைப்பவர்களை அழிப்பவளாக குண்டலகேசி என பல்வேறு தளங்களில் பெண்கள் கோலோச்சிய காலங்கள் காணக்கிடக்கின்றன. ஆனால் சிந்தனையாளர்கள், படைப்பாளிகள், அறிவு ஜீவிகளால் சமூக வளர்ச்சி, தேச நலம் போன்றவைகளில் ஒற்றுமையாக செயல்பட முடிந்தாலும் பெண் விடுதலை சார்ந்த கருத்துக்களில் நெடுங்காலமாகவே மாறுபட்டே இருந்து வந்துள்ளனர். வரலாற்றில் தாய் உரிமைச் சமுகம் ஆதிச்சமுதாய அமைப்பாக இருந்துள்ளது. வேட்டைச் சமுகத்திற்கு முந்தைய காலங்களில் உணவு தேடுவதே வேலையாக இருந்தது.ஆண்,பெண் பிரிவினை என்பது இல்லாதிருந்தது. குழந்தைப்பேறு, பாலூட்டுவது போன்ற செயல்களால் பெண் முன்னுரிமை பெற்றிருந்தாள். ஈட்டி, வேல் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டதும் வேட்டையானது ஆணின் தொழிலாக மாறிற்று. மேய்ச்சல் மற்றும் உணவு சேகரிப்பிற்காக விவசாயத்தை பெண்களே கண்டுபிடித்தனர்.உழு கலப்பைகள் கண்டுபிடித்தவுடன் விவசாயம் ஆண்கள் வசமாயிற்று. ஆண்களின் கைகளில் பொருளாதார பலம் குவிக்கப்பட்டது. அப்பலம் பெண்களின் மீது எளிதாக ஆண்களால் பிரயோகிக்கப்பட்டது. அப்பொழுது கால்நடைகளை கொடுத்து பெண்களை விலைக்கு வாங்கினர். தவிர்க்க முடியாதபடி ஆணாதிக்க சமூகம் நிறுவப்பட்டது. தனிச்சொத்தின் தோற்றத்திற்கும் பெண் அடிமைத் தனத்திற்கும் நேரடி தொடர்பு இருந்திருக்கவேண்டும் என்று எங்கல்ஸ் கூறுவது கவனிக்கத்தக்கது. பின்னர் அந்த அடிமைத்தனத்தை மத நிறுவனங்கள் கையில் எடுத்துக்கொண்டு பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. பெண்ணானவள் ஆணின் உடைமை. உடைமையினை மறு உற்பத்தி செய்பவள் என்று செயற்கை பொறுப்புக்களில் திணிக்கப்பட்டதால் அவளுடைய பாலியல் அவளுக்குரியதாக இன்றி, ஆணுக்காகவும், அவனால் கையாளக் கூடியதாகவும் ஆக்கப்பட்டது. இயற்கையானது பெண்ணையும், ஆணையும் சமமாகவே நிலைநிறுத்தியுள்ளது. இயற்கை இயங்கு விதியில் இது ஒரு நட்பு முரண். இந்த நட்பு முரண் இல்லையெனில் மனித குலம் அழியும். இம்முரணை வர்க்க பேத, சாதிபேத மற்றும் அனைத்து ஆதிக்கத்திற்கும் அடிப்படைத் தளமாக கட்டமைத்துவிட்டது ஆணாதிக்க உலகம். மதம், சமூகம், தத்துவம், அரசியல், பொருளியல் எல்லாமே ஆண்களின் தனிப்பட்ட உரிமையாகவே இருந்து வருவது வரலாற்றின் வெறுப்பூட்டும் தொடர் உண்மையாகும். இதனால் பெண்கள் சமூக கடமையற்றுவதற்கு வாழ்வியல் சுழல்கள் பெருந்தடையாக உள்ளது. பருவ வயதடையும் வரை ஆண், பெண் இருவருக்கும் எவ்வித மாறுபாடுகளும் இருப்பதில்லை. வழிவழியாக சமூகம் தன் மூளையில் பதிவாகிய படிமங்களைக் கொண்டு, ஆண் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு பொருட்கள், உடைகள் போன்றவற்றை தனித்தனியே பிரித்து வழங்கிக்கொண்டிருக்கிறது. இது பள்ளி, கல்லூரிகளிலும் அழுத்தமாக கற்பிக்கப்படுகிறது. இப்பொழுதெல்லாம் பெண்கள் எவ்வளவோ முன்னேறி விட்டார்கள் என கூறுவது ஆணாதிக்க சிந்தனையின் மறுவடிவமாகவே காண முடிகிறது. இவர்கள் விதிவிலக்குகளை கணக்கிலெடுத்து விதிகளை காண மறுப்பவர்கள். இருபதாம் நூற்றாண்டில்தான் பெண்களுக்கான பல சட்டங்கள், சங்கங்கள், புத்தகங்கள் பல வந்துள்ளன. இருப்பினும் இன்னும் வெறும் உடம்பாக மட்டுமே பார்க்கும் பார்வை மட்டும் மறைய மறுக்கிறது. பெண்ணை அடிமையாக பார்க்கும் பார்வையானது நாம் பழங்கால மூட நம்பிக்கையினை இன்னும் விடாமல் வளர்த்துக் கொண்டிருப்பதாகவே கருத முடியும். மேலும் பல பெண்கள் தங்களுக்கான உரிமைகள் மற்றும் சலுகைகளை பிரித்தறியத் தெரியாமல் இருக்கின்றனர். சலுகைகளை விட்டொழித்தால்தான் உரிமைகளை பெற முடியும் என்பதை உணர்தல் வேண்டும். தற்பொழுது திருமணங்கள் பெரும்பாலும் ஆணுக்கு மகிழ்ச்சியானதாகவும், கூடுதல் இணைப்பாக வேலைக்காரி, சமையல்காரி, தாய், தாசிகளுடன் கிடைப்பதாகவே எண்ணுகிறான். தன் அழைப்பிதழில் கூட வாழ்க்கை இணையர் என்பதற்கு பதிலாக வாழ்க்கை துணை என அச்சிட்டு தன்னுடைய ஆணாதிக்கத்தை நிலைநிறுத்துகிறான். ஆணுக்கு உள்ளது போல் பெரும்பான்மை பெண்களுக்கு திருமணம் மகிழ்ச்சியளிக்காமல் புதிய கடமைகள், புதிய சுழல்கள் போன்றவை குறித்து அச்சமூட்டுபவையாகவே இன்றும் உள்ளது. ஊடகங்கள் அனைத்தும் ஆணாதிக்க சூழலுக்கு ஆதரவு அளிப்பதாகவே உள்ளது. கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமே இருக்க வேண்டுமென்கிறது. இச்சிந்தனை மாற்றத்தினை எழுதுவதலோ, பேசுவதாலோ மாற்றி விடுதல் என்பது இயலாது. ஆண், பெண் சமத்துவத்தின் அடிப்படை அறிவியல் பூர்வமான வேலைப்பிரிவினையோடு கூடியதாக நம் மாற்றி அமைக்கப்பட்டு தொடங்கப்படுதல் வேண்டும். மனித இனத்தை செழுமையாகவும், முழுமையானதாகவும் வார்த்தெடுக்கும் நிகழ்வுகள்தான் மனித குல வரலாறு. உண்மையான மனிதகுல வரலாற்றின் தொடக்கம் பெண் விடுதலையிலிருந்துதான் பெற முடியும்.

03 மே 2011

அறிதல்

இயற்கையின் படைப்பில் மானுடம் மிக அழகானது. மற்றெந்த உயிர்களுக்குமில்லா பேசும் தன்மை, சிந்திக்கும் தன்மை, பகுத்தறியும் தன்மை, ரசிப்புத்தன்மை போன்றவை பொருந்தி அமைந்த உயிரினமாக மானுடம் திகழ்கிறது. ரசிப்புத்தன்மை என்பது மானுடத்திற்கு மட்டுமே உரியது. இயற்கையை முழுமையாக உணர்ந்து வாழ ரசிப்புத்தன்மை மிக அவசியமாகிறது. இயற்கையை அழகாக உணர மானுடம் மட்டுமே அறிந்து வைத்திருக்கிறது. ரசிப்புத்தன்மைக்கு அடிப்படை காதல். காதலினை இப்படியும் சொல்லலாம். இனவிருத்திக்காக இயற்கை செய்யும் தூண்டுதல் உணர்வின் தொடக்கம் தான் காதல். எனவே காதலின் அடிப்படையாக காமம் இருக்கிறது. எதிரெதிர் வினையினை கவர்வதற்காகவே இயற்கையை நாம் அழகாக பார்க்கக் கற்றுக்கொள்கிறோம். உண்மையான அழகை தேடலில் காணலாம். அழகிற்கான தேடல் உள்ளவரை மனிதன் ரசிகனாக இருக்கிறான்.தேடுவதற்கும் அறிவதற்கும் வேறுபாடு உண்டு. தேடுவதற்கு தீர்மானம் இருந்தால் போதும்.ஆனால், பக்குவம் இருந்தால்தான் அறிய முடியும். பிரபஞ்சத்தில் படைப்பாளிகளை இருவகைப்படுத்தலாம். ஒன்று இயற்கை. மற்றொன்று படைப்புக்குள்ளேயே படைப்பாளி ஆகிக்கொள்கிற மானுடம்.அம்மானுடம் இயற்கைப் படைப்புக்களை அழகோடு பார்க்கும் பார்வைகளை அழகியல் எனலாம். இயற்கையை அழகோடு பார்க்கும் தொடர் பழக்கத்தினால் இயற்கையிலுள்ள பொருட்கள் ரசனைக்குரியதாக மாறுகிறது. எது விதைக்கப்படுகிறதோ அது சுழலின் தன்மையோடு வளர்த்தெடுக்கப்படும். தற்போது சூழலைப் பொறுத்து ரசனையின் அளவுகோலும் மாறியுள்ளது. ரசனையின் அளவுகோல் மாறியதற்கு மனிதன் இதுவரை தன் மூளையில் உள்வாங்கிக் கொண்டுள்ள பலவிதமான முன் முடிவுகளே அதற்குக் காரணம்இதன்  காரணிகளாக ஊடகம்,கடவுள்,மதம்,சாதி,மோட்சம்,நரகம்,ஊழ்வினை,ஆன்மா,வர்க்கபேதம்ஆண்பெண், பேதம் போன்றவைகளை கூறிக்கொண்டே போகலாம். இயற்கை தன்னை அழகாகவே காட்டிக்கொண்டிருக்கிறதுநாம்தான் பார்க்கத் தவறிக்கொண்டிருக்கிறோம்அழகை ரசிக்க மறந்து விட்டு வாழ்க்கையில் எப்பாடியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என எண்ணுகிறோம். உண்மையில் வெற்றி என்பது பொய்த்தோற்றம். வெற்றியினை தேடுவதென்பது சமுதாய நிர்பந்தத்தினால் மட்டுமே. அதன் அடிப்படையாக இருப்பது சமூக நிராகரிப்பு குறித்த அச்சமே. எல்லா ஆசைகளும் அச்சத்தின் அடிப்படையிலேயே அமைகிறது. தேவை வேறு. ஆசை வேறு.ஆதியில் மானுடம் தேவைக்காக மட்டுமே அழகியலை உள்வாங்கியிருந்தது. ஆனால் தற்பொழுது ஆசைக்காக இயற்கையான அழகியலை மறந்துவிட்டு செயற்கைத் தன்மைக்கு மானுடம் மாறியிருக்கிறது. புதிதாகக் கற்றுக்கொண்டு வாழத்தேவை யில்லைவாழத்தடைகளாகக் கற்றுக்கொண்டவைகளை மனதிலிருந்து அழித்து விட்டால் போதும். தேவைக்கேற்ப மட்டும் ஆசை அமைந்தால் தெளிவும், நிதானமும் தானாகப்பிறக்கும். தெளிவு பிறந்து விட்டால் பார்வை தெரியும். பார்வை தெரிந்தால் பாதை தெரியும். பார்வையானது ஒருவருக்கொருவர் கொண்டுள்ள முன் முடிவுகளின் அடிப்படையில் தேவை சார்ந்து மாறுபடுகிறது. முன்முடிவுகளால் இயற்கையிலுள்ள மானுடம் இயற்கையுடன் அந்நியப் பட்டு நிற்கிறது. வாழ்க்கை என்பது ஒவ்வொரு கணத்தையும் முழுதாய் ஆக்கிக்கொள்வதுதான். புவியிலுள்ள பொருட்களை மானுடம் ரசிக்கக் கற்றுக்கொண்டதால்தான் நமக்கு பல்வேறு கலைகள் கிடைத்தது. ஆக்கப்பூர்வமான விடயங்கள் அனைத்தும் அழகியல் தன்மையோடுதான் நிகழ்ந்தேறியுள்ளது .அழகியலற்ற தன்மை மானிடத்தை அற்ப நிலைக்கு தள்ளிவிடும். முன்முடிவுகளால் ஏற்படுத்திக்கொண்ட எதிர் மறைகளை விலக்கி, நேர்மறைகளை நோக்கி பார்வையினை செலுத்தினால் இப்புவி அழகாகும். அழகியலை மானுடத்திற்கு விளக்க வேண்டிய கலை வல்லுனர்களே முன்முடிவுகளால் குறுகி விற்ப்பன்னர்களாக மாறியுள்ளது வருந்தத் தக்கது.கலைகளை தவிர்த்து விட்டு வரலாறு என்பது கிடையாது. உண்மையான வரலாறு என்பதை கலை,இலக்கியங்களிலிருந்து மட்டுமே அறிய முடியும்.கலை,இலக்கியம் உருவாக அழகியல் தன்மை முதன்மையாக உள்ளது. ஆக,அழகியல் பார்வையை விரிவுபடுத்துவோம். அழகியலோடு வாழ்வோம்அழகியலோடு உண்மை வரலாற்றை மானுடத்திற்கு அளிப்போம்.

புத்த மார்க்க வினா-விடை - க.அயோத்திதாசர்

My Example Bouncing ball

02 மே 2011

பவுத்த சான்றிதழ்

சிதம்பரம் வட்டடாட்சியர் வழங்கிய பவுத்த சான்றிதழ்
டாக்டர் அம்பேத்கர் தொடங்கிய புத்திஸ்ட் சொசைட்டி ஆஃப் இந்தியா வழங்கிய பவுத்த சான்றிதழ்
தமிழக அரசிதழில் பவுத்தம் மாறுவதற்கான அறிவிப்பு விளம்பரம்
பவுத்தம் மாறிய SC/ST வகுப்பினருக்கு மட்டும் இடஒதுக்கீடு உண்டு என்பதற்கான பிரசிடென்சியல் ஆனண
தினமணி செய்தித்தாள் வெளியிட்ட செய்தி
தினத்தந்தி செய்தித்தாள் வெளியிட்ட செய்தி
தினமலர் செய்தித்தாள் வெளியிட்ட செய்தி
புதிய நீதிச்சக்கரம் மாத இதழ் வெளியிட்ட செய்தி
கொற்றவை மாத இதழ் வெளியிட்ட செய்தி
தலித் முரசு மாத இதழ் வெளியிட்ட செய்தி
தி இந்து ஆங்கிலச் செய்தித்தாள் வெளியிட்ட செய்தி
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, டெக்கான் க்ரானிகல் ஆங்கிலச் செய்தித்தாள்கள் வெளியிட்ட செய்திகள்
பவுத்தம் குறித்து பல்வேறு செய்தித்தாள்கள் வெளியிட்ட செய்திகள்

உயர்நீதி மன்ற தீர்ப்பாணை W.P.NO.5874 OF 2010

இத் தீர்ப்பு நகலை வைத்து இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் பவுத்த சான்று தயக்கமின்றி பெற முடியும்.