புத்தர்

Buddha

அம்பேத்கர்

Ambedkar

நிம்மதிக்கான இரண்டு வழிகள்: விட்டுக்கொடுங்கள் அல்லது விட்டுவிடுங்கள்

I never see what has been done; I only see what remains to be done

நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமையில்லை

Cultivation of mind should be the ultimate aim of human existence

உனக்கு நீயே விளக்காயிரு ‍-புத்தர் *****வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது -டாக்டர் அம்பேத்கர்*****உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே -புத்தர்*****நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை -டாக்டர் அம்பேத்கர்*****அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது -புத்தர்***** நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை -டாக்டர் அம்பேத்கர்

23 மார்ச் 2012

தென்னிந்திய பவுத்த சங்கம்





தென்னிந்திய பவுத்த சங்கம் 1900 ஆம் ஆண்டு அயோத்திதாசப் பண்டிதரால் சென்னை பெரம்பூரில் தொடங்கப்பட்டது. பெரம்பூரில் பவுத்த சங்கம் கட்டுவதற்கு பேராசிரியர் பி .லட்சுமி நரசுவும் , தோழர் எம். சிங்கரவேலுவும் சேர்ந்து ஸ்ரீ அனாகரிக தம்மபாலாவிடம் ருபாய் 3ooo பெற்று பணியினை தொடங்குகின்றனர். செலவுத்தொகை மேலும் அதிகமானதால் மீண்டும் அனாகரிக தம்மபாலாவிடம் பண உதவி கோரப்பட்டது. அதற்கு அவர் கூடுதல் தொகை தர மறுத்துவிடுகிறார். அதனால் சங்க உறுப்பினர்கள் மூலமாகவும், பொதுமக்கள் மூலமாகவும் வசூலித்த பணத்தில் பவுத்த சங்கம் கட்டிமுடிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பவுத்தருக்கும் சொந்தமான பவுத்த சங்கம் இது மட்டுமே. இந்த தென்னிந்திய பவுத்த சங்கத்தின் முகவரி : #41, நெல்வயல் சாலை, பெரம்பூர், சென்னை - 600011

2 கருத்துகள்:

  1. அருமையான பதிவு, பெளத்தம் தழுவியவர்கள் உண்மையாகவே சுயமரியாதைக்காரர்கள்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல தகவல் ..தென்னிந்திய பெளத்த சங்கம் தொடங்கப்பட்ட வருடம் .1890 யாக இருக்க வேண்டும் .என நினைக்கிறேன் (1990 அல்ல ) ..சரிபார்க்கவும் ....
    அன்புடன் -வேலு

    பதிலளிநீக்கு