உனக்கு நீயே விளக்காயிரு ‍-புத்தர் *****வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது -டாக்டர் அம்பேத்கர்*****உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே -புத்தர்*****நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை -டாக்டர் அம்பேத்கர்*****அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது -புத்தர்***** நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை -டாக்டர் அம்பேத்கர்

09 மே 2011

இந்தியாவின் முதன்மை பவுத்த அடையாளங்கள்1906 ஆம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இக்கொடியினை இந்திய தேசியக் கொடியாக வடிவமைத்தனர். இதில் அன்னிபெசன்ட் அம்மையாரும்,
திலகரும் முதன்மையானவர்கள்.


1916-17 ல்,திலகரும், அன்னிபெசன்ட் அம்மையாரும் சேர்ந்து "ஹோம் ரூல்" இயக்கத்தினை தோற்றுவிக்கின்றனர். அவ்வியக்கத்தின் போது இக்கொடியினை இந்திய தேசிய கொடியாக உருவாக்கினர்.


1921 ல் மோகன் லால் கரம்சந்த் (காந்தி!!!) முயற்சியால் இக்கொடி உருவாக்கப்பட்டது. சிறுபான்மையினருக்கு வெள்ளை, இசுலாமியருக்கு பச்சை, இந்துக்களுக்கு சிவப்பு, கைராட்டினம் மக்களின் வாழ்வாதாரம் எனவும் கற்பிதம் செய்யப்பட்டது.1931 ல் இக்கொடி, முழுவதும் இந்துத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டது.
1931 ஆகஸ்ட் 1 ல் காங்கிரஸ் அங்கீகாரத்தின் பேரில் கொடியமைப்பு இவ்வாறு மாற்றப்பட்டது. இதில் ஆரஞ்சு (தைரியம்), வெண்மை (சமாதானம்), பசுமை (தன்னம்பிக்கை), கைராட்டினம் (மக்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை தருவது) என கற்பிதம் செய்யப்பட்டது.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ராஜேந்திர பிரசாத்அவர்களை தலைவராகவும், மௌலானா அபுல் கலாம் ஆசாத், கே. எம். பனிக்கர்,சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலச்சாரி, கே. எம். முன்ஷி, பி. ஆர். அம்பேத்கர் ஆகியோரை குழுநபர்களாக கொண்ட அமைப்பு, தேசியக் கொடியாக ஒரு கொடியை நியமிக்க விவாதிக்கிறது. . கொடியில் பட்டை, நாமம், ராட்டை போன்றவைகளை வைப்பதற்கு மதத்தலைவர்களால் பல்வித கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.
அது டாக்டர் பி. ஆர். அம்பேத்கருக்கு உடன்பாடாக இல்லை.அவையினைவிட்டு வெளிநடப்பு செய்கிறார்.


டாக்டர் பி. ஆர். அம்பேத்கரால் அரசமைப்புச் சட்டம் எழுதவேண்டியிருப்பதால் சின்னம் பொறிப்பது குறித்து அவரின் முடிவுக்கே விடப்பட்டது.
இந்தியாவின் பூர்வீக பவுத்த சமயத்தின் அடையாளமாக அசோகச்சக்கரத்தை பரிந்துரைக்கிறார். அது 1947 ஜூலை 22 ஆம் தேதி பொறிக்கப்படுகிறது.இது போல புத்தர் முதல் பேருரை நிகழ்த்திய சாரநாத்தில் உள்ள புத்த சமயத்தை சார்ந்த அசோகரின் ஸ்தூபியில் வடிவமைக்கப்பட்டிருந்த நான்முக சிங்க முகங்கள் இந்திய அரசின் சின்னமாகவும், இந்திய நாணயம் மற்றும் பணங்களிலும் பொறிக்கப்படுகிறது.


மேலும், அந்த ஸ்தூபியின் சிங்ககங்களுக்கு அடியில் புத்தர் கூறிய "விரிதாமரை இதழ் போல உன் மனதை திறந்து வை" என்பதற்கேற்ப 16 இதழ்களுடன் வடிவமைக்கப்பட்ட "தாமரை " இந்தியாவின் தேசிய மலராக அறிவிக்கப்பட்டது.

இச் சின்னங்கள் இந்தியாவின் முக்கிய அடையாளமாக மாறியதால் மதவாதிகள் தேசியக்கொடியையும், பணங்களையும் அழிக்கமுடியாமல், புத்தர் கிருஷ்ணனின் 11 வது அவதாரம் என பிதற்றுகின்றனர்.

மேலும்,இந்து மதக் கட்சியின் (பிஜேபி) அரசியல் சின்னமாக சிதைந்துள்ளது.
இவை மட்டுமின்றி பல்வேறு தளங்களில் பூர்வீக பவுத்த சமய அடையாளங்கள் சிதைக்கப்பட்டுள்ளது.

இப்பூர்வீக சமயத்தினை பின்பற்றிய பூர்வ குடிகளும் இந்து, முஸ்லீம், கிருத்துவம் என சிதைந்துள்ளனர்.

வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது என்பார் டாக்டர்


பூர்வ குடிகள் தம் வரலாற்றை அறிய முன் வருவதும், பவுத்த அடையாளங்களை மீட்டெடுப்பதும் இன்று அவசியத் தேவை.

1 கருத்து:

  1. தோழா,
    ஆரியன் ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் தேசத்துரோக வழக்கு பாய்ந்துவிட போகிறது. சிறப்பான பதிவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு