 
          
          மீனாம்பாள் சிவராஜ்
          
         
          
          மீனாம்பாள் சிவராஜ்
          
         />
 />
          
          மீனாம்பாள் சிவராஜ்
          
         
          
          டாக்டர் அம்பேத்கருடன் மீனாம்பாள் சிவராஜ்  
          
        வேலூர் கோ.வாசுதேவப்பிள்ளை -மதுரை  மீனாட்சி ஆகியோருக்கு புதல்வியாக 26 டிசம்பர் 1904 ல் பிறந்தார்.  தந்தை சிவராஜின் வாழ்க்கை இணையர்.   சைமன் குழு வருகையை ஆதரித்து பேசி  1928 ல் தம் பொது வாழ்வை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர். இந்தி எதிர்ப்பு போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர். 
சென்னை மாநகராட்சியின்  துணை மேயர் ,கவுன்சிலராக 6 ஆண்டுகள், கவுரவ மாகாண நீதிபதியாக 16 ஆண்டுகள், திரைப்பட   தணிக்கை குழு உறுப்பினராக 6 ஆண்டுகள், சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினராக  9 ஆண்டுகள்,  தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர்  ,   சென்னை  நகர  ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர்,    சென்னை பல்கலைக் கழக    செனட்   உறுப்பினராக   13 ஆண்டுகள் ,   போருக்குப்பின்  புணரமைப்புக்குழு உறுப்பினர்,   S.P.C.A உறுப்பினர்,      நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர், தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர்,  அண்ணாமலை   பல்கலை கழக  செனட் உறுப்பினராக 6 ஆண்டுகள் ,  சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர், விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர், காந்தி நகர் மகளிர் சங்கத்  தலைவர், மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவராக 6 ஆண்டுகள், சென்னை அரசு மருத்துவ மனைகளின்  ஆலோசனைக் குழு உறுப்பினர், அடையார் மதுரை மீனாட்சி  மகளிர் விடுதி நடத்துனர், லேடி வெலிங்டன்  கல்லூரி தேர்வுக்குழு தலைவர் போன்ற பொறுப்புகள் வகித்து  மக்கள் பணி  ஆற்றியவர். 
பல்வேறு  மகளிர் போராட்டங்களில்   தலைமை ஏற்று வழி நடத்தியவர். 
பெரியார் ஈ. வெ. ராமசாமிக்கு "பெரியார்" என்ற பெயர் வழங்கி சிறப்பித்தவர்.
இணையர் தந்தை சிவராஜுடன் இணைந்து பவுத்த நெறியினை மக்களிடம் பரப்பினார்.  
டாக்டர் அம்பேத்கரின் தங்கை என செல்லமாக அழைக்கப்பட்டவர். 
30 நவம்பர் 1992 ல் பரிநிப்பாணம் அடைந்தார்.
 
 
                 
                 
                 
             
 
 
           
           />
 />
          