உனக்கு நீயே விளக்காயிரு ‍-புத்தர் *****வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது -டாக்டர் அம்பேத்கர்*****உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே -புத்தர்*****நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை -டாக்டர் அம்பேத்கர்*****அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது -புத்தர்***** நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை -டாக்டர் அம்பேத்கர்

22 நவம்பர் 2019

அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 அரசியல்


அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 1 சமூகம்


அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 2 சமயம்


அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 2 இலக்கியம்


அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி 3


07 நவம்பர் 2019

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 1


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 2


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 3


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 4


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 5


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 6


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 7


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 8


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 9


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 10


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 11


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 12


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 13


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 14


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 15


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 16


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 17


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 18


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 19


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 20


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 21


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 22


25 அக்டோபர் 2019

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 23


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 24


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 25


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 26


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 27


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 28


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 29


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 30


24 அக்டோபர் 2019

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 31


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 32


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 33


பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 34


08 அக்டோபர் 2015

டாக்டர் அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள். 22 Vows of Dr. Ambedkar

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், அக்டோபர் 14, 1956 அன்று தீக் ஷாபூமி, நாக்பூரில் ஆறு லட்சம் பேர்களுடன் பௌத்த சமயத்தில் இணைந்த‌ போது ஏற்றுக்கொண்ட 22 உறுதிமொழிகள். உலகில் மிகப்பெரிய சமயமாற்றமாக இந்நிகழ்வு கருதப்படுகிறது. இந்து மத பந்த‌த்தை முழுமையாக துறப்பதற்கு இவ்வுறுதிமொழிகள் பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வுறுதிமொழிகள் இந்து மத நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளின் வேர்களில் தாக்குலை நடத்தியது. இவ்வுறுதிமொழிகள் பவுத்தத்தை குழப்பம், முரண்பாடுகளிலிருந்து பாதுகாக்கும் அரணாக அமைந்தது. இவ்வுறுதிமொழிகளால் சாதி இந்துக்கள் ஏற்படுத்திய மூடநம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகளிலிருந்து மக்களை விடுவிக்க முடியும்.

Dr.B.R.Ambedkar prescribed 22 vows to his followers during the historic religious conversion to Buddhism on 14 October 1956 at Deeksha Bhoomi, Nagpur in India. The conversion to Buddhism by 600,000 people was historic because it was the largest religious conversion, the world has ever witnessed. He prescribed these oaths so that there may be complete severance of bond with Hinduism. These 22 vows struck a blow at the roots of Hindu beliefs and practices. These vows could serve as a bulwark to protect Buddhism from confusion and contradictions. These vows could liberate converts from superstitions, wasteful and meaningless rituals, which have led to pauperisation of masses and enrichment of upper castes of Hindus.1. நான் பிரம்மா, விஷ்ணு, சிவன்(மகேஸ்வரன்) ஆகியவற்றை கடவுளாக  நம்பமாட்டேன்,  வணங்கமாட்டேன்.
 •  I shall have no faith in Brahma, Vishnu and Mahesh nor shall I worship them.

2. நான் ராமன், கிருஷ்ணன் இரண்டும் இறைவனின் அவதாரமென்று நம்பமாட்டேன், வணங்கமாட்டேன்.
 • I shall have no faith in Rama and Krishna who are believed to be incarnation of God nor shall I worship them.

3. நான் கௌரி, கணபதி,  மற்றும் இந்துக் கடவுளர்கள் மற்றும் பெண் கடவுளர்ளை நம்பமாட்டேன், வணங்கமாட்டேன்.
 •  I shall have no faith in ‘Gauri’, Ganapati and other gods and goddesses of Hindus nor shall I worship them.

4. நான்  கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்ததாகவோ நம்பமாட்டேன்.
 •  I do not believe in the incarnation of God.

5. மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்பதை நான் நம்பமாட்டேன்.  இதை சுத்த முட்டாள்தனமான‌, தவறான பிரச்சாரமாகவே கருதுகிறேன்.

 • I do not and shall not believe that Lord Buddha was the incarnation of Vishnu. I believe this to be sheer madness and false propaganda.
6.நான் இறப்பு நிகழ்ச்சியில் இந்துமதச் சடங்குகளான‌ சிராத்தா,பிண்டம் போன்றவற்றை கொடுக்கமாட்டேன்.

 • I shall not perform ‘Shraddha’ nor shall I give ‘pind-dan’.

7. நான் புத்தரின் போதனைகளையும், நெறிகளையும் மீறி செயல்பட‌ மாட்டேன்.
 • I shall not act in a manner violating the principles and teachings of the Buddha.

8. எனது எந்தவொரு விழாக்களையும் நிகழ்த்த பார்ப்பனர்ளை அனுமதிக்க மாட்டேன்.
 • I shall not allow any ceremonies to be performed by Brahmins. 

9. நான் மனிதனின் சமத்துவத்தை நம்புவேன்.
 • I shall believe in the equality of man.

10. நான் சம‌த்துவத்தை நிலை நிறுத்த முயற்சி செய்வேன்.
 • I shall endeavour to establish equality.

11. நான் புத்தரின் எண்மார்க்க வழிகளை  பின்பற்றுவேன்.

 • I shall follow the ‘noble eightfold path’ of the Buddha.

12. நான் புத்தரின் பத்து தம்ம போதனைகளை (பாரமிதா) பின்பற்றுவேன்.

 • I shall follow the ‘paramitas’ prescribed by the Buddha.

13. நான் எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி, பாதுகாப்பேன்.
 • I shall have compassion and loving kindness for all living beings and protect them.

14. நான் களவு செய்ய மாட்டேன்.

 • I shall not steal.

15. நான் பொய் பேச மாட்டேன்.

 • I shall not tell lies.

16. நான் உடல் இன்பத்துக்காகத் தவறுகள் செய்ய மாட்டேன்.
 • I shall not commit carnal sins.

17. நான் மது , போதைமருந்துகள் அருந்த மாட்டேன்.
 • I shall not take intoxicants like liquor, drugs etc.

 18. நான் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் புத்தரின் எண்மார்க்க வழிகளையும், அன்பு, கருணை,இரக்கம் ஆகியவற்றை  அமைத்துக்கொள்ள முயற்சி செய்வேன்.

 • I shall endeavour to follow the noble eightfold path and practise compassion and loving kindness in every day life.

19. நான் மனித நேயத்துக்கு முரணான, சம‌த்துவம் இல்லாத கேடுகெட்ட இந்து மதத்தை விட்டொழித்து, இன்றுமுதல் மேன்மைமிகு பவுத்தத்தில் இணைத்துக்கொள்கிறேன்.

 • I renounce Hinduism which is harmful for humanity and impedes the advancement and development of humanity because it is based on inequality, and adopt Buddhism as my religion.

20. புத்தரின் அறநெறி மட்டுமே உண்மையானது என்று உறுதியாக நான் நம்புகிறேன்.

 • I firmly believe the Dhamma of the Buddha is the only true religion.

21. நான் இன்று மறுவாழ்வு பெற்றதாக நம்புகிறேன்.
 • I believe that I am having a re-birth.

22. நான் புத்தரின் அறநெறிப் போதனைகளின்படி இன்று முதல் செயல்படுவேன்.
 • I solemnly declare and affirm that I shall hereafter lead my life according to the principles and teachings of the Buddha and his Dhamma.

06 ஜூன் 2013

புத்தா மக்கள் நலச்சங்கம், சிதம்பரம்.


 டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நிலைநாட்ட, சிதம்பரத்தில் புத்தா மக்கள் நலச்சங்கம் 24 மே 2013 புத்தர் பிறந்த நாளில் பதிவு செய்யப்பட்டு துவங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இச்சங்கத்தின் கிளையை நிறுவ ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.

30 மார்ச் 2012

தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005. RIGHT TO INFORMATION ACT-2005


  
தகவல் அறியும்  உரிமைச் சட்டம் -2005.

அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டதுதான் இந்தியத் தகவல் உரிமைச் சட்டம்-2005.

நோக்கம்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நோக்கத்துடன் 2005 ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த உரிமையை பேச்சுரிமையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்திருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி மத்திய, மாநில அரசுகள் மற்று அரசு சார்பு நிறுவனங்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல்களையும் பெற முடியும். அரசுத் துறைகளிடம் தனியார் நிறுவனங்களின் விவரங்கள் இருந்தால் அதையும் இச்சட்டத்தின் கீழ் பெற முடியும். இந்தியக் குடியுரிமை பெற்ற எவரும் இந்தச் சட்டத்தின் வழியாக தகவல்களைக் கோர முடியும். இதன் வழியே

1. அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல்.
 

2. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல்.
 

3. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடி மக்களுக்கு, அதை அளிக்க வகை செய்தல். இதன் மூலம் லஞ்சம், ஊழல் போன்றவற்றை ஒழித்தல்.
 

4. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல்.
போன்றவை முக்கிய நோக்கங்களாக இருக்கின்றன.

தகவல்கள்
தகவல் என்றால் என்ன? தகவல் என்பது எதைக் குறிப்பிடுகிறது? என்கிற எண்ணம் நமக்கு வரலாம். தகவல் என்பது பதிவேடுகள், ஆவணங்கள், கடிதங்கள், இ-மெயில்கள், கருத்துகள், அறிவுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஒப்பந்தங்கள், மாதிரிகள் உள்ளிட்ட அனைத்துமே "தகவல்" என்ற பிரிவின் கீழ் வைக்கப்படுகின்றன. இதன்படி கீழ்காணும் அனைத்தும் தகவல்கள்தான்.
1. அரசிடமுள்ள ஆவணங்களில் இருந்து குறிப்புகள் எடுத்தல்
2.
அரசின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை நகல் எடுத்தல்
3.
அரசின் பணிகளைப் பார்வையிடுதல்
4.
அரசின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பார்வையிடுதல்
5.
சான்றளிக்கப்பட்ட மாதிரிகளைப் பெறுதல்
6.
தேவையான தகவலைத் தேவைப்படும் வடிவத்தில் பெறுதல்

தகவல் பெறுவதன் நன்மைகள்
தகவல்களைப் பெறுவதன் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கப் போகிறது? என்கிற கேள்வி நமக்குத் தோன்றலாம். ஒரு அரசு நிறுவனத்தில் இருந்து எந்தத் தகவலையும் பெற முடிகிறது. இதன் மூலம் அரசு நிர்வாகத்தின் பொறுப்பும், வெளிப்படையான செயல்களும் அதிகரிக்கிறது. இதன் மூலம் ஓரளவு லஞ்சம் மற்றும் ஊழல் போன்றவை குறைய வாய்ப்பிருக்கிறது. அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதையும் திட்டங்கள் அனைத்தும் மக்களை முறையாகப் போய்ச் சேருகின்றனவா என்பதையும் நாம் இந்தத் தகவல் உரிமைச் சட்டத்தின் வழியாகத் தெரிந்து கொள்ள முடியும். மேலும் குறைகள் இருப்பின் அதைச் சரி செய்ய வேண்டும் என்கிற பொறுப்பும் அரசுக்கு ஏற்படும். இதன் மூலம் இந்திய அரசியல் அமைப்பில் மக்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்துக் கொள்ள ஒரு வழி ஏற்படுகிறது.

மாநிலத் தகவல் ஆணையம்
தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 15-ன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தகவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இச்சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஆணையம், ஒரு மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களின் கீழ் கடந்த 07.10.2005 ஆம் தேதி முதல் இயங்கி வருகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 5, உட்பிரிவு 1-ன்படி, தகவலுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு, தகவல் அளிப்பதற்காக ஒவ்வொரு அலுவலகத்திலும், பொதுத்தகவல் அலுவலர் என்கிற பொறுப்பில் ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும் உட்பிரிவு 2-ன்படி, தகவல் கோரும் விண்ணப்பங்களை அல்லது மேல்முறையீடுகளைப் பெற்று, அவற்றைப் பிரிவு 19, உட்பிரிவு 1-ன்படி, பொது தகவல் அலுவலருக்கோ அல்லது மாநில தகவல் ஆணையத்திற்கோ அனுப்பி வைப்பதற்காக அலுவலர் ஒருவர் ஒவ்வொரு உட்கோட்ட அல்லது உள்மாவட்ட நிலையில் உதவி பொதுத்தகவல் அலுவலராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். தலைமைச் செயலகம், துறைத்தலைவர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்கள் போன்றவற்றில் தகவல் பெறுவதற்காக பொதுத்தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலர் போன்றவர்களின் அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவைகள் தரப்பட்டுள்ளன. இவை குறித்த சில விபரங்கள் அரசின் இணைய தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

தகவல் அறியும் சட்டம்-பயன்படுத்துவது எப்படி?
தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 6-ன்படி, தகவல் பெற விரும்புபவர், ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில், ஒரு வெள்ளைத் தாளில் எழுத்து வடிவிலோ அல்லது மின்னணு வழியிலோ, உரிய அலுவலகத்திலுள்ள பொது தகவல் அலுவலர் அல்லது உதவிப் பொதுத் தகவல் அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன், இதற்கான கட்டணமாக ரூ.10/- (ரூபாய் பத்து மட்டும்) வரைவோலை (Demand Draft) அல்லது அரசு கருவூல சீட்டு (Treasury Challan) மூலம் செலுத்தி அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் ரூ.10/-க்கான நீதிமனற வில்லை (Court Fee Stamp) அந்தப் படிவத்தில் ஒட்டிவிட வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் ரூ.10/- செலுத்திய விபரம் தெரிவிக்கப்பட வேண்டும். (மத்திய அரசு நிறுவனமெனில் ரூபாய் 10‍‍ க்கான இந்தியன் போஸ்டல் ஆர்டர் (Indian Postel Order) இணைக்கவேண்டும்.) மேலும் விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் தேவைப்படும் தகவலின் விபரங்களை எந்த வடிவத்தில் வழங்க வேண்டும் என்பது குறித்த தகவலுடன் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து வடிவில் விண்ணப்பம் செய்ய முடியாத நிலையில், அதனை எழுத்து வடிவில் செய்திட அனைத்து உதவிகளையும் பொதுத் தகவல் அலுவலர் அல்லது உதவிப் பொதுத் தகவல் அலுவலர் செய்திட வேண்டும்.

தகவலுக்காக விண்ணப்பம் செய்கிற விண்ணப்பதாரர்களிடம் அந்த தகவலைக் கோருவதற்கான காரணத்தைக் கேட்டல் மற்றும் அவரைத் தொடர்பு கொள்வதற்குத் தேவையான விபரங்களைத் தவிர, தனிப்பட்ட சொந்த விவரங்கள் எவற்றையும் கோருதல் கூடாது.


ஒரு தகவலுக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகம் ஒன்றிடம் விண்ணப்பம் செய்யப்படுகிற நிலையில், அந்தத் தகவல் பிற அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களில் வைத்திருக்கப் பட்டதாக அல்லது அதன் உரிய பொருள் பிற அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயற்பணிகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்கும் போது, அந்த விண்ணப்பத்தினை அல்லது அதன் உரிய பகுதியை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மாற்றல் செய்து அனுப்பி விட வேண்டும். மாற்றல் செய்து அனுப்பப்பட்ட விபரத்தை விண்ணப்பதாரருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு தகவல் கேட்கும் விண்ணப்பதாரகளுக்கு 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட்டாக வேண்டும். 


தகவல் 30 நாட்களில் கிடைக்காவிட்டால் அதே அலுவலகத்தில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவரும் 30 நாட்களுக்குள் சரியான தகவல்கள் அளிக்காவிட்டால் தமிழக தகவல் ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்து தகவல் பெறலாம். தகவல் அளிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் ரூ 25,000 வரை அபராதம் விதிக்கத் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.


 • கேள்விகளை குழப்பாமல் தெளிவாக (முடிந்தால் இரண்டு வரியில்) கேட்கவும்.


 • அதிகமான தகவல்கள் வேண்டுமெனில் பல கேள்விகளாக பிரித்துக்கொள்ளவும்.


 • கடிதங்களை பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் (Registered Post with Acknowledgement Due (RPAD) அனுப்புதல் அவசியம்.
 
மேல்முறையீட்டிற்கான அலுவலக முகவரிகள்:
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முகவரி:

தலைமை ஆணையர், 
தமிழ்நாடு தகவல் ஆணையம், 
2,தியாகராய சாலை,
ஆலையம்மன் கோயில் அருகில், 
தேனாம்பேட்டை,  சென்னை- 18.
Phone: 044- 24347590
Fax: 044 - 24357580
email : sic@nic.in


மத்திய தகவல் ஆணையத்தின் முகவரி:

CENTRAL INFORMATION COMMISSION
August Kranti Bhavan, Bhikaji Cama Place, New Delhi - 110 066   
&  Old JNU Campus, New Delhi - 110 067. 
Phone:26161137 Fax: 26186536 Helpline: 61117666

மாதிரி விண்ணப்பப் படிவங்கள்
நாம் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கவில்லை என்றால் 
கீழ்கண்ட விண்ணப்பத்தை பயன்படுத்தவும்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அதற்கான சான்றிதழ் நகல் இணைத்தால் நீதிமன்ற கட்டணம் ரூ 10 ஒட்டாமல் இலவசமாக தகவலை பெற முடியும். ஆன்லைன் சேவை

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்லைன் மூலம் தகவல் பெறும் சேவையில் ரூ.10 இன்டர்நெட் பேங்கிங் மூலம் எஸ்.பி.ஐ., மற்றும் அது சார்ந்த வங்கிகள் மூலம் செலுத்தி, இந்த ஆன்லைன் சேவையை பயன்படுத்தலாம். கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகளையும் இதற்காக பயன்படுத்தலாம். www.rtionline.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று உங்களுக்கான USER NAME, PASSWORD, USER TYPE, NAME பதிவு செய்தவுடன் உங்களுடைய e.mail க்கு ACTIVATION KEY அனுப்பப்படும். அதன்படி அதில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில், ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் மனுவை பதிவேற்றம் செய்யலாம்.


இந்த மனு 500 வார்த்தைகள் கொண்டதாக இருக்க வேண்டும். 500 வார்த்தைகளுக்கு மேல் உள்ளதாக இருந்தால் அதனை கூடுதல் இணைப்பாக இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும் . பதிவு செய்யப்பட்ட மனு குறிப்பிட்ட துறைக்கு அனுப்பப்பட்ட உடன் மனுதாரரின் மொபைல் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும்.

தகவல்கள் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும் சந்தேகங்களுக்கு 97911 39325

23 மார்ச் 2012

தென்னிந்திய பவுத்த சங்கம்

தென்னிந்திய பவுத்த சங்கம் 1900 ஆம் ஆண்டு அயோத்திதாசப் பண்டிதரால் சென்னை பெரம்பூரில் தொடங்கப்பட்டது .
பெரம்பூரில் பவுத்த சங்கம் கட்டுவதற்கு பேராசிரியர் பி .லட்சுமி நரசுவும் , தோழர் எம். சிங்கரவேலுவும் சேர்ந்து ஸ்ரீ அனாகரிக தம்மபாலாவிடம் ருபாய் 3ooo பெற்று பணியினை தொடங்குகின்றனர்.
செலவுத்தொகை மேலும் அதிகமானதால் மீண்டும் அனாகரிக தம்மபாலாவிடம்
பண உதவி கோரப்பட்டது. அதற்கு அவர் கூடுதல் தொகை தர மறுத்துவிடுகிறார்.
அதனால் சங்க உறுப்பினர்கள் மூலமாகவும், பொதுமக்கள் மூலமாகவும் வசூலித்த பணத்தில் பவுத்த சங்கம் கட்டிமுடிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பவுத்தருக்கும் சொந்தமான பவுத்த சங்கம்
இது மட்டுமே. இந்த தென்னிந்திய பவுத்த சங்கத்தின் முகவரி :
#41, நெல்வயல் சாலை, பெரம்பூர், சென்னை - 600011

25 ஆகஸ்ட் 2011

`புத்தரும் அவர் தம்மமும் ` தமிழ் மொழியாக்க நூல் முதலில் வெளிவர காரணமானவர்கள்
டாக்டர் அம்பேத்கர் எழுதிய "BUDDHA AND HIS DHAMMA" ஆங்கில நூலின்
தமிழாக்கம் "
தமிழாக்க நூல் வெளியிட்டுக் குழு" ஒன்று அமைக்கப்பட்டு மிகு சிரமத்துடன் முதன் முதலில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்தது.
அந்நூலுக்கு உழைத்தவர்களின் பெயர்கள் தற்போது வெளிவரும் நூட்களில் மறைக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்களையும், அணிந்துரைகளையும் கீழே காணலாம்.


`BUDDHA AND HIS DHAMMA` ஆங்கில நூலுக்கு பயன்பட்ட குறிப்புதவி நூட்களின் பட்டியல்டாக்டர் அம்பேத்கர் கடைசியாக எழுதிய " BUDDHA AND HIS DHAMMA" என்ற நூலினை வாசித்தவர்கள் சிலர் இது ஏதோ புனைக்கதை போல உள்ளது என பேசக்கேட்டு கவலையுற்றேன்.
அது புனைக்கதையல்ல . முற்றிலும் ஆதாரப்பூர்வமானது என்பதை கீழ்கண்ட ஆதாரக் குறிப்புக்களை படித்து அவர்கள் தெளிவு பெறலாம்.


23 ஆகஸ்ட் 2011

பவுத்தம் வளர்த்த மேனாட்டினர்


ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்


(Albert Einstein, மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல்அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன், குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.
ஹெச். ஜி. வெல்ஸ்

(


(H. G. Wells, செப்டம்பர் 21, 1866 – ஆகஸ் 13, 1946) ஒரு ஆங்கில எழுத்தாளர். சம காலத்திய புதினங்கள், வரலாறு, அரசியல், சமூக விமர்சனம் என்று பலவகைப்பட்ட துறைகளில் எழுதினாலும் இவர் தனது அறிபுனை படைப்புகளாலேயே அறியப்படுகிறார். வெல்ஸ் அறிபுனை இலக்கியத்தின் தந்தையர் என்று கருதப்படும் இருவருள் ஒருவர். (மற்றவர் ழூல் வேர்ண்).

வெல்ஸ் ஒரு சமதர்மவாதி. பொதுவாக அவர் அமைதிவாதத்தை ஆதரித்தாலும் முதலாம் உலகப் போர் துவங்கிய போது அதனை ஆதரித்தார். ஆனால் பின்னர் இந்த ஆதரவு எதிர்ப்பாக மாறி விட்டது. இவரது பிறகாலத்திய எழுத்துகளில் அரசியல் கருத்துகள் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளன. இவரது எழுத்தின் மத்திய காலகட்டத்தில் (1900-1920) எழுதப்பட்ட படைப்புகளில் அறிபுனை படைப்புகள் குறைவு. கீழ் நடுத்தர வர்க்கம், பெண் வாக்குரிமைப் போராளிகள் போன்ற சமூகத் தொடர்புடைய விஷயங்களைப் பற்றி இக்காலகட்டத்தில் புதினங்களை எழுதினார். காலப் பயணம், மரபியல் சோதனைகள், வேற்று கிரக வாசிகள் பூமியைத் தாக்குதல், நிலவுக்கு மனிதன் செல்வது, அணு ஆயுதப் போர் போன்ற பிரபல அறிபுனை பாணிகளை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி வெல்சே. இவரது எழுத்துக்களால் கவரப்பட்ட ராபர்ட் கொடார்ட் என்னும் அறிவியலாளர் எறிகணைகளை (ராக்கெட்) கண்டுபிடித்தார். வெல்சின் படைப்புகள் பின் வந்த எழுத்தாளர் தலைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவற்றுள் பல திரைப்படங்களாகவும், வானொலி நிகழ்ச்சிகளாகவும் தயாரிக்கப் பட்டுள்ளன.கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்(Henry Steel Olcott, ஆகஸ்ட் 2,1832- பெப்ரவரி 17,1907) பல முகங்கள் கொண்ட இவர் ஒரு அமெரிக்க இராணுவ அதிகாரி, பத்திரிக்கையாளர், வழக்கறிஞர் மட்டுமல்லாது இவர் பிரம்மஞான சபையின் (தியோசாபிகல் குழுமம்) நிறுவனர்களின் ஒருவராவார். மேலும் இவரே இந்த குழுமத்தின் முதல் தலைவரும் ஆவார் .

ஐரோப்பிய வேர்களை கொண்ட பிரபலங்களில் முதன் முதலாக முறையாக பௌத்தத்திற்கு மாறிய பெருமை இவரையே
சாரும். மேலும் பிரும்மஞான சங்கத்தின் தலைவராக இவர் மிக சிறப்பாக பணியாற்றி பௌத்த மத கூறுகளை புரிந்துகொள்வதில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்தினார். மேற்குலக பார்வையில் பௌத்தத்தை முன்னிறுத்திய இவர் ஒரு நவீன பௌத்த அறிஞராக கருதபடுகிறார்.

இலங்கையில் பௌத்தத்தை மறு சீரமைப்பதில் இவருடய பங்கு முக்கியமானது. இன்றைய இலங்கையின் மத, கலாசார, தேசிய பண்புகளை மறுநிர்மாணம் செய்தவர் என்றும் இலங்கையின் விடுதலைப் போராட்டத்தின் நாயகர்களில் ஒருவர் என்றும் இன்றும் இலங்கையில் இவரின் பால் பெரும் மரியாதையோடு இருக்கின்றனர். மேலும் சில தீவிர விசுவாசிகள் இவரை போதிசத்துவர்களில் ஒருவர் என்றும் நம்புகிறார்கள்.
பெர்ட்ரண்டு ஆர்தர் வில்லியம் ரசல்


(Bertrand Arthur William Russell, 3rd Earl Russell, மே 18 - 1872 - பெப்ரவரி 2, 1970), ஒரு பிரித்தானிய மெய்யியலாளர், கணித மேதை, ஏரணவியலர் (தருக்கவாதி), சமூக சீர்திருத்தவாதி, அமைதிவாதி ஆவார். இவர் பெரும்பாலும் இங்கிலாந்தில் தன் வாழ்க்கையை கழித்தாலும், வேல்சில் பிறந்தார், அங்கேயே இறந்தார்.ரசல் 1900 ஆரம்பங்களில் பிரித்தானிய இலட்சியவாதத்திற்கு எதிராக கிளர்ச்சி என்பதைத் தொடங்கினார், மேலும் பகுப்பாய்வு தத்துவம் என்பதை அவர் மாணவர் விட்கன்ஸ்டைன், பெரியவர் ஃபிரேக என்பவர்களுடன் சேர்ந்து நிறுவினார். ஏ. என். ஒயிட்ஹெட் உடன் சேர்ந்து, பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (கணிதத்தின் கோட்பாடுகள்) என்னும் நூலை எழுதி, கணிதத்தை ஏரணத்தின் அடிப்படையில் நிறுவ முயன்றார். அவரது தத்துவக் கட்டுரை "ஆன் டிநோட்டிங்" (On Denoting) குறிப்பிடுவது பற்றி "தத்துவத்தின் வழிகாட்டி எடுத்துக்காட்டு" என கருதப்படுகிறது. இரு புத்தகங்களும் ஏரணம், கணிதம், மொழியியல், கணங்கள் கோட்பாடு, பகுப்பாய்வுத் தத்துவம்முதலியவற்றின் மேல் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தின.அவர் போர் எதிர்ப்புச் செயலாளர், காலனியத்தின் எதிர்ப்பாளர், தடையிலா வாணிபத்தின் ஆதரவாளர். ரசல் முதலாம் உலகப் போரின் போது தனது போர் எதிர்ப்பு செயல்களால் சிறை தள்ளப் பட்டார். இட்லருக்கு எதிராக பிரச்சாரம் நடத்தினார், சோவியத் ஒன்றியத்தின் வரம்பற்ற அதிகாரத்தை எதிர்த்தவர். அணுகுண்டு கைவிடுதலை ஆதரித்தவர், அமெரிக்காவின் வியட்நாம் உள்ளீட்டை எதிர்த்தவர்.

ரசலுக்கு, 1950 இல், இலக்கிய நோபல் பரிசு "அவருடைய பலதரப்பட்ட, முக்கியமான எழுத்துகளில் மானுட இலட்சியங்களையும், கருத்து சுதந்திரத்தையும் உணர்ந்தோம்" என்பதற்காக கிடைத்தது".சர். எட்வின் அர்னால்டு

sir edwin arnold (10 June 1832 – 24 March 1904)
செய்தியாளர்
, ஆசிரியர், மற்றும் கவிஞர்
.
சர். எட்வின் அர்னால்டு எழுதிய "The Light of Asia" என்னும் நூலைத் தழுவி கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களால் எழுதப் பெற்ற நூல் "ஆசிய ஜோதி" ஆகும். இந்நூல் புத்தர் பெருமானின் வரலாற்றை விளக்குவது.வளரும்
.......