புத்தர்

Buddha

அம்பேத்கர்

Ambedkar

நிம்மதிக்கான இரண்டு வழிகள்: விட்டுக்கொடுங்கள் அல்லது விட்டுவிடுங்கள்

I never see what has been done; I only see what remains to be done

நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமையில்லை

Cultivation of mind should be the ultimate aim of human existence

உனக்கு நீயே விளக்காயிரு ‍-புத்தர் *****வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது -டாக்டர் அம்பேத்கர்*****உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே -புத்தர்*****நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை -டாக்டர் அம்பேத்கர்*****அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது -புத்தர்***** நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை -டாக்டர் அம்பேத்கர்

18 நவம்பர் 2010

இரட்டை மலை சீனுவாசன்


செங்கை மாவட்டத்தில் மதுராந்தகம் அருகில் கோழியாலம் என்னும் கிராமத்தில் சடையன் என்பவருக்கு 7.7.1859 அன்று மகனாகப் பிறந்தார். அம் மாவட்டத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமை தாங்கமாட்டாமல் தஞ்சைக்குக் குடிபெயர்ந்தது அக் குடும்பம். பின்னர் கோவை படிக்க தேர்ந்த போது படித்த 400 பிள்ளைகளில் 10 பேர் தவிர மற்றவர்கள் பிராமணர்கள். சாதிகள் மிகத் கடினமாக கவனமாகக் கடைபிடிக்கப்பட்டதால், சாதி இந்து மாணவர்களுடன் பழகுவதால் சாதி, குடும்பம், இருப்பிடம் ஆகியவை தெரிந்துவிட்டால் என்ன நடக்குமோ என்று அஞ்சி படித்து வந்தார். இதற்காகப் பள்ளியின் காலை திறப்பு மணி அடிக்கும் வரை மறைவான இடத்தில் தங்கிப் படித்து மணி அடித்ததும் நேராக வகுப்பு சென்று அமர்ந்து கொள்வான்.


படிப்பு முடித்தவுடன் நீலகிரியில் 1882 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் வணிகப் பணிமனையில் வேலையில் சேர்ந்தார். பிளாவட்ஸ்கி அம்மையார் தியோசாபிகல் சொசைட்டி மூலம் வறுமையாலே வாடுகிற மக்களுக்கு வழி காட்டுகிறேன் என்று சொல்லி மதமாற்றம் செய்தார்கள். ஆனால் இரட்டை மலை சீனிவாசன், அதற்கு நான் இந்துவாகப் பிறந்து விட்டதால் இந்து மதத்திலிருந்து கொண்டே உரிமைக்காகப் போராட வேண்டி கோருவேன் என்றார்.

1884 ஆம் ஆண்டு சென்னை அடையாறில் தியோசோடிகல் சொசைட்டியின் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் வங்காள பாபுகளும், பம்பாய் பார்சிகளும், பிராமணர்களும், ஐரோப்பா, அமெரிக்கா, இலங்கை முதலான தேசங்களிலிருந்து கலந்து கொண்டனர். அப்போது அரசியல் இயக்கம் தோற்றுவிக்க முடிவெடுக்கப்பட்டது.
இந்தியாவின் பிரச்சினைகள் இரண்டு. இந்தியர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து உரிமைக்காகவும், பூரண சுதந்திரமடைய வேண்டும். இந்தியாவில் பிறந்து வளர்ந்து பூர்வீகக் குடிமக்களாக வாழ்ந்து வரும் செட்யூல்டு இனமக்கள், இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமையை எதிர்த்து விடுதலை அடைய வேண்டும். இந்த இரண்டு பிரச்சினைகளில் இரட்டைமலை சீனிவாசன் சமுதாய விடுதலைக்கே முக்கியத்துவம் கொடுத்தார்.

1886 ஆம் ஆண்டு தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் இரண்டாவது மாநாடு நடந்தது. முதல் மாநாட்டின் சாதித்த சாதனைகளையும், திட்டத்தை பற்றி தாதாபாய் நௌரோஜி We are met together as a political body to represent to our rulers our political aspirations but not to discuss social reforms என்று பேசினார்.

சீனிவாசன் 1980 ஆம் ஆண்டு சென்னையில் குடியேறினார். ஒரு வாரப்பத்திரிக்கையை உருவாக்கினார். அதற்குப் பறையன் என்று பெயர் வைத்தார்.

நான்! நான்! என்ற மகா மந்திரத்தை சொல்லிக் கொண்டிருப்பவன் தன்னை உணர்ந்து சகலமும் அறியும் ஞானியாகி தலைவனைக் காண்பதுபோல் நான்! நான்! என்று எவன் ஒருவன் தன்னையும் தன் இனத்தையும் மறுக்காமல் அச்சமும் நாணமும் இல்லாமல் உண்மை பேசித் தன் சுதந்திரத்தைப் பாராட்டுகின்றானோ அவன் மதிக்கப்பெற்று இல்வாழ்க்கையில் இன்பமுள்ளவனாய், நித்திய சமாதானத்துடன் வாழ்வானாகையால் �பறையர்� இனத்தாருக்கு �பறையன் என்பவன் �நான் தான் என்று முன் வந்தாலொழிய அவன் சுதந்திரம் பாராட்ட முடியாமல் தாழ்த்தப்பட்டு என்றும் தரித்திரனாய் இருப்பான். எனவேதான் நான் பறையன் எனும் மகுடம் சூட்டி ஒரு பத்திரிக்கையை ஆரம்பித்தேன் என்று எழுதினார். (- ஜீவிய சரித்திரச் சுருக்கம் - பக். 8).

பறையன், 15 ரூபா மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 1893 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன் முதலில் நான்கு பக்கங்கள் கொண்ட மாதாந்திரப் பத்திரிகையாக இரண்டு அணாவாக விலையில் வெளிவந்தது. இரண்டு நாட்களில் 400 பிரதிகள் விற்கப்பட்டன. ஈராண்டுகளுக்கு பிறகு அச்சு எந்திரசாலை நிறுவப்பட்டது. மூன்று மாதத்திற்குப் பின் வாரந்திரப் பத்திரிகையாக 7 ஆண்டுகள் வெளிவந்தது. 1891-ல் �பறையர் மகாஜன சபையைத் இரட்டை மலை சீனிவாசன் தோற்றுவித்தார். பி. ஆறுமுகம் என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1893 நவம்பர் 7ம் நாளிட்ட பறையன் இதழில் பறையன் முகவரியிட்டு வரும் கடிதங்களை முகவரியாளர்களைத் நேரில் தேட முடியாது என அஞ்சல் ஊழியர்கள் சேரிக்குள் நுழைவதில்லை என்றும் கூறினார். 1895 ஆம் ஆண்டு டிசம்பர் 6ந் தேதி சென்னைக்கு வருகை தந்த கவர்னர் ஜெனரல் எல்ஜின் பிரபுவுக்கு மிகப் பெரிய பந்தலிட்டுப் பறையர் மகாஜன சபை வரவேற்றது.

1898 ஆம் ஆண்டு மகாராணி விக்டோரியா சக்ரவர்த்தினியின் 60ஆவது ஆளுகை விழாவின் போது வாழ்த்துக் கூறி அனுப்பிய செய்தியைப் பார்த்து அகம் மகிழ்ந்து 1898 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் தேதி எழுதியிருக்கிறார்.

இந்துக்கள், முகமதியர்கள், கிறிஸ்துவர்கள், பறையர், பஞ்சமர், தாழ்த்தப்பட்டோர் என்னும் பல பேரால் அழைக்கப்பட்டு வந்து இப்போது ஆதி திராவிடர்கள் என வழங்கும் சமூகத்தவர்களும் இதர சமூகத்தவர்கள் போல் அரசாங்கத்தில் அலுவல்களிலும், ஆட்சி முறைகளிலும், மாநில மந்திரி பதவியிலும் பங்கு பெற உரிமை உண்டாகி இருக்கிறது. ஆதி திராவிட இனம் என்னும் புதிய மதத்தை உருவாக்குவதே நோக்கமாக இருந்தது. அரசாணை 68-1893 ஒரு முக்கியமான ஆவணம். குறைந்தது 7 பிள்ளைகள் படிக்க நேர்ந்தால் அதை ஒரு பள்ளிக்கூடமாக ஏற்றுக்கொண்டு அப்பள்ளிக்கு மான்யம் அளிக்க அரசு முன்வரும் என்று இந்தச் சட்டம் கூறுகிறது.

அக்காலத்தில் பெரும்பாலும் ஜாதி இந்துகளும், பிராமணர்களும் ஆசிரியர்களாக இருந்தனர். இந்த உயர் ஜாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் செட்யூல்டு மக்களுக்குப் பாடம் சொல்லித்தர முன்வரமாட்டார்கள். இதனால் செட்யூல்டு மாணவர்கள் படிக்க வாய்ப்பில்லை.

1898 அக்டோபர் 21-ம் தேதி இக்கொடுமையைத் தெளிவாக எழுதி ஆங்கில அரசுக்குத் தெரிவித்தார். இதன் விளைவாகச் சென்னை முனிசிபாலிடி பள்ளிக்கூடம் கட்ட வேண்டி ஆங்கில அரசு உத்தரவு அளித்தது. அதனால் செட்யூல்டு மாணவர்கள் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 65 ஆண்டுக்காலம் கவனிக்க ஆட்கள் இல்லாமல் 1893-ம் ஆண்டு கல்வி கற்பிக்க அரசு முன்வந்தது. பலன் தரவில்லை. கிராம அதிகாரி, வருவாய்த்துறை தாசில்தார், துணை ஆட்சியாளர் போன்றவர்கள் முட்டுகட்டை போட்டனர்.

1893ஆம் ஆண்டு பறையன் பத்திரிகையில் இக்கொடுமையை பற்றி விளக்கமாக எழுதிய காரணத்தால் வருடா வருடம் 20, 30 லட்சம் ரூபாய் கல்விக்காகச் செலவு செய்ய அரசினர் தீர்மானித்தனர். அரசாங்கப் பள்ளிகளை சரிவர பராமரிக்க முடியாமல் சில பள்ளிகள் மூடப்பட்டன. ஆனால் கிறித்துவ மிஷனரி பள்ளிகள் ஏராளமாகத் திறக்கப்பட்டன. ஆனால் கல்வி வளர்ச்சி என்ற பெயரில் மதமாற்றமும் செய்யப்பட்டது.

1904-ல் நேட்டாலில் தங்கியிருந்தபோது பீட்டரின் உதவியால் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு காந்திக்கு மொழிபெயர்ப்பாளராக விளங்கினார். 1923ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தின் மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருந்தபோது ரெவின்யூ இன்ஸ்பெக்டர் பதவி ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தரவேண்டும் என்று கோரினார்.

கிராமங்களில் படித்த, பணம் படைத்தவர்கள் படிக்காத அப்பாவி மக்கள் மீது தங்களது ஆட்சி அதிகாரத்தைச் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களையே ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக நியமனம் செய்வது என்பது உரிமைக்காகக் குரல் கொடுக்காதவர்களாகத் தென்படுகிறது. எனவே தனி வாக்குரிமையின்படி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை அரசுக்குத் தெரிவிக்க ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளையே தேர்ந்தெடுப்பது நலம் என்று கருதினார்.

1924 செப்டம்பரில் 25-ம் தேதி நி. 2660 L & M கவர்ன்மென்ட் உத்தரவு

(1) எந்த வகுப்பையாவது, சமூகத்தையாவது சேர்ந்த யாதொரு நபராகிலும் யாதொரு பட்டணம் அல்லது கிராமத்தில் உள்ள எந்த பொது ரஸ்தா தெரு, அல்லது கால் வழி மார்க்கமாகவாயினும் நடப்பதற்கு ஆட்சேபனை இல்லை.

(2) இந்தத் தேசத்திலுள்ள சாதி இந்துகள் எம் மாதிரியாகவும் எவ்வளவு மட்டிலும் யாதொரு சர்க்கார் ஆபீசைச் சேர்ந்த வளைவுக்குள் போகலாமோ, யாதொரு பொதுக்கிணறு, குளம் அல்லது பொதுஜனங்கள் வழக்கமாய்க் கூடும் இடங்கள் உபயோகிக்கலாமோ அல்லது பொதுவான வேலை நடத்தப்பட்டு வருகின்ற இடங்கள், கட்டிடங்கள் ஆகிய இவைகளுக்குள் போகலாமோ அம்மாதிரியாகவும், அவ்வளவு மட்டிலும் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த யாதொரு நபர் போவதற்காவது உபயோகிப்பதற்காவது ஆட்சேபணை இல்லை என்பது அரசாங்கத்தின் கொள்கை என்பதை அவரவர்கள் அறிந்துகொள்ளவேண்டும். இதை இரட்டைமலை சீனிவாசன் முன்மொழிந்தார்.

1926ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி ராவ்சாகிப் பட்டம் அளிக்கப்பட்டது. 1930 ஜுன் மாதம் 6-ம் தேதி திவான்பகதூர் பட்டமும் திராவிடமணி என்ற பட்டமும் அளிக்கப்பட்டன. அதே ஆண்டு நவம்பர் 12-ம் தேதி லண்டன் மாநகரில் முதல் வட்டமேஜை மாநாடு கூடியது. இதில் இரட்டைமலை சீனிவாசன், ஜெயகர், அம்பேத்கர், ஆகாகான், ஹென்றிகிட்னி, க்யூபார்ட்கார், பன்னீர்செல்வம், ராமசாமி முதலியார்பாத்ரோ, முகமது அலி ஜின்னா, பிக்கானீர் மகாராஜா, சீனிவாச சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர். காந்தி சிறையில் இருந்ததால் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. இரண்டு வட்டமேஜை மாநாடுகள் முடிந்து 1932-ல் ஆகஸ்ட் 17-ல் Communal award வெளியிடப்பட்டது.

செட்யூல்டு இன மக்கள் அரசியல் சுதந்திரம் கிடைப்பது பலன் தராது. தனிவாக்குரிமை மூலம் செட்யூல்டு இன வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஏற்படும். செட்யூல்டு மக்கள் இந்துக்கள் பட்டியலில் அடங்காது. பண்டிகை நாட்களில் சாராயக் கடைகளை மூட வேண்டும். வேலை செய்தால் தானியங்களுக்குப் பதிலாகப் பணமாகக் கொடுக்க வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்தார்.

1939 செப்டம்பர் 17-ம் தேதி சென்னை சிந்தாதிரிப் பேட்டை நேப்பியர் பூங்காவில் செட்யூல்டு மக்களைக் கூட்டி இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்துக்கு ஆதரவு தெரிவித்தார். 1939ஆம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி காலை 10 மணி அளவில் தந்தை பெரியார் காங்கிரஸ் அல்லாதார் இயக்கக் கூட்டங்களைக் கூட்டினார். இதற்கு முன்னர் 1933ஆம் ஆண்டு லார்டு லெவிங்க்டனால் Wonderful Rice ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த அரிசியில் 123 ஆங்கில எழுத்துகள் பதிக்கப்பட்டிருக்கும். அதைப் பெற்றவர்கள் தமிழகத்தில் இருவர். அவர்கள் 1. இரட்டைமலை சீனிவாசன் 2. திருப்பத்தூர் கௌதமாபேட்டை பெரியசாமி புலவர். இருவருமே தாழ்த்தப்பட்ட மக்கள் இயக்கங்களின் முன்னோடிகள் ஆவர்.

�நாங்கள் கணக்கிட முடியாத வருடங்களாகக் கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றோம். எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை. எதிர்காலத்தில் எங்கள் இனம் சமத்துவமாகவும், சமாதானத்துடனும் வாழ எண்ணுகிறது. எங்களுடைய முன்னேற்றத்தில் மற்றவர்கள் குறுக்கிட்டால் நாங்கள் சகிக்கமாட்டோம். இனி மேலும் நாங்கள் எவ்விதக் கொடுமையையும் ஏற்கமாட்டோம். எங்களுடைய கீழான நிலைமைக்கு அவர்களிடம் உள்ள அமைதியும், அன்புக்குணமுமே காரணமாகும் என 1895 அக்டோபர் 7-ல் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சூளுரைத்தார். இத்தகைய பெருமகனார் 1945 செப்டம்பர் 18, 2-45 மணியளவில் எண்.4, எம். வீரபத்திரன் தெரு, பெரியமேடு பகுதியில் உயிர்நீத்தார்.




1 கருத்து:

  1. இன்று தாத்தா ரெட்டைமலயாரின் பிறந்தநாள். அவரை நினைவுகூர்வோமாக. அருமையான பதிவு. தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு