புத்தர்

Buddha

அம்பேத்கர்

Ambedkar

நிம்மதிக்கான இரண்டு வழிகள்: விட்டுக்கொடுங்கள் அல்லது விட்டுவிடுங்கள்

I never see what has been done; I only see what remains to be done

நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமையில்லை

Cultivation of mind should be the ultimate aim of human existence

உனக்கு நீயே விளக்காயிரு ‍-புத்தர் *****வரலாறு தெரியாமல் வரலாறு படைக்க முடியாது -டாக்டர் அம்பேத்கர்*****உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே -புத்தர்*****நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னைக்கொல்லும் ஆயுதமாய் நான் மாறி விடுவது என் கடமை -டாக்டர் அம்பேத்கர்*****அறியாமையோடு நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன் ஒருநாள் வாழ்வது மேலானது -புத்தர்***** நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை -டாக்டர் அம்பேத்கர்

31 ஜூலை 2011

தந்தை என்.சிவராஜ் B.A., B.L.,Ex.MP.,Ex.Mayor

Document
வறுமை என்னவென்று தெரியாத நமச்சிவாயம் -வாசுதேவி தம்பதியருக்கு சென்னை ராஜஸ்தானியில் ஒன்றிணைந்த கடப்பா ஜில்லாவில் 1892 செப்டம்பர் 29 ஆம் தேதி பிறந்தார். 4 ஆம் வகுப்பு வரை தன் வீட்டிலேயே படித்தார். பின் சென்னை ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் அப்போது தலைமை ஆசிரியராக இருந்த டி.ஜான்ரத்தினம் அவர்களிடம் 5 ஆம் வகுப்பு பயின்றார். தனது மெட்ரிக் படிப்பை முடித்து வெஸ்லி கல்லூரியில் 'இண்டர்மீடியேட்' பயின்றார். பிறகு சென்னை மாநிலக்கல்லூரியில் B.A பட்டம் பயின்றார். இக்கல்லூரியில் டாக்டர் இராதாக்கிருஷ்ணன் இவரின் ஆசிரியராக இருந்தது சிறப்புக்குரியது. பின் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பினை முடித்தார். மேலும் சட்டக் கல்லூரியில் 3 ஆண்டுகள் பேராசியராக பணியாற்றினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வழக்காட தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். தனக்கு துணை நீதிபதி பதவி தந்ததை ஏற்காமல் மக்கள் பணி செய்வதை உயர்வாக கருதினார். 1918 ஜூலை 10 ல் தனது 26 ஆம் வயதில் அன்னை மீனாம்பாளை வாழ்க்கை இணையராக்கிக்கொண்டார். தம்பதிகள் ஆதிதிராவிட மகாஜன சபா, ஜஸ்டிஸ் கட்சி , சுயமரியாதை இயக்கம், ஆகியவற்றுடன் இணைந்து சாதி ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு மறியல் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டனர். கல்யாணி, தயாசங்கர், பத்மினி, போதி சந்தர் என 4 மகவுகள் இவர்களுக்கு பிறந்தனர். பவுத்தத்தை தங்களுடைய வாழ்வியல் நெறியாக இருவரும் பின்பற்றினர். சென்னை மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் செனட் உறுப்பினராக தந்தை திகழ்ந்தார். அப்பொழுது மிகப்பெரிய அந்தஸ்தில் உள்ள பெரு முதலாளிகளுக்கு சரி நிகராக பந்தயக்குதிரைகளை வைத்து போட்டிகளில் வென்று காட்டியவர். ஆதிதிராவிட மக்கள் சட்டை அணியக்கூடாது, காலில் செருப்பு போடக்கூடாது என்பவை மனித உரிமைக்கு துரோகமானது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுத்திட தனி அதிகாரியினை நியமிக்க வேண்டுமென சட்ட சபையில் முழங்கியவர். சென்னை மாகாண தாழ்த்தப்பட்ட சம்மேளனத்தின் பொதுச்செயலாளராகவும், சென்னை மாகாண தாழ்த்தப்பட்டோர் துணைத் தலைவராகவும் இருந்தவர். இரட்டை மலை சீனுவாசனாருடன் டாக்டர் அம்பேத்கர் அமைத்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளனத்திற்கு (A.I.S.C.F) 1942 முதல் தலைவராக இருந்தவர். பிறகு டாக்டர் அம்பேத்கர் A.I.S.C.F கலைத்து விட்டு அகில இந்திய குடியரசுக் கட்சியை அமைத்தார். 1956 முதல் அக்கட்சியின் தலைவராக தந்தை சிவராஜ் ஏக மனதாக நாக்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிக்காலம் வரை அப்பொறுப்பினை வகித்தார். இந்து மதத்தினை புறக்கணித்து விட்டு , மதம் மாறினால்தான் , நாம் ஒரு தனி இனமாக உரிமைக்குரல் எழுப்பிட முடியும்,போராட முடியும் என வலியுறுத்தினார். நம் பூர்வீக பவுத்த நெறியினை மக்களிடையே பரப்பினார். 1945-46 ல் சென்னை மாநகர மேயராக பதவி வகித்தார். அப்போது கல்விக்காக 16 பள்ளிகளை ஏற்ப்படுத்தி, இலவச உணவும் அளிக்கச்செய்தார். 1964 செப்டம்பர் 29 ஆம் நாள் அதிகாலை 5.30 மணிக்கு மாரடைப்பால் பரிநிப்பானம் அடைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக